முகப்பு /செய்தி /வணிகம் / பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் சூப்பரான சேமிப்பு திட்டம்... விவரங்கள் இதோ..

பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் சூப்பரான சேமிப்பு திட்டம்... விவரங்கள் இதோ..

காட்சி படம்

காட்சி படம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்குச் சிறு வயதில் இருந்தே சேமிக்க உதவு திட்டம் தான் மத்திய அரசின் செல்ல மகள் சேமிப்பு திட்டம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்களின் பெண் குழந்தைக்கு என்று பிரத்யேகமாக சேமிப்பு திட்டம் தேடிகின்றவாரா நீங்கள் ? அப்படி என்றால் இந்த கட்டுரை உங்களுக்காகத் தான். மத்திய அரசு இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக வழங்கப்படும் சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா என்கின்ற செல்ல மகள் சேமிப்பு திட்டம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா:

பெண் குழந்தைகளின் நலன்களுக்காகவே மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேமிப்புத் திட்டம். பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் யாராக இருந்தாலும் தபால் நிலையங்களில் கணக்கு துவங்கலாம். செலுத்தும் தொகைக்குப் பிரிவு 80 சி யின் படி வரி விலக்கு அளிக்கப்படுவதால் அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஏதுவான திட்டமாக உள்ளது.

பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு கணக்குகளைத் தொடங்கலாம். ஒருவேளை இரட்டைக்குழந்தைகள் பிறந்த பின்னதாக, 3 வது குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கணக்குகளைத் தொடங்கலாம்.

சேமிப்புக் கணக்குத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தைகளின் நலன்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்திற்கான கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை உங்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, புகைப்படம் போன்றவற்றைச் சமர்ப்பித்து நீங்கள் கணக்குத் தொடங்கலாம். ரூபாய் 250 செலுத்திச் சேமிப்புக் கணக்கை நீங்கள் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகையானது ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.

இவ்வாறு நீங்கள் சேமிக்கும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டும் தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.

Also Read : Vande Bharat Express: கோவா ட்ரிப் பிளானா? வருகிறது வந்தே பாரத் ரயில் சேவை...

நீங்கள் செலுத்தும் தொகையைக் காசோலை, வரைவோலை மற்றும் நேரடியாகப் பணத்தை டெபாசிட் செய்யலாம். உங்களால் நேரடியாகத் தபால் நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், ஆன்லைன் வாயிலாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும். தொடர்ந்து நீங்கள் மாதந்தோறும் பணத்தைச் செலுத்தி வரவும். ஒருவேளை பணத்தைச் சரியாகக் கட்டத் தவறும் பட்சத்தில் டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தினால் தான் கணக்கைப் புதுப்பிக்க முடியும்.

top videos

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்பட்டு வட்டி விகதங்களில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இத்திட்டம் மூலம் விரைந்து சேமிப்பு கணக்கைத் தொடங்கிச் சேமித்தால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகளில் உயர் கல்விக்கு உதவும்.

    First published:

    Tags: India post, Savings, Sukanya Samriddhi Yojana