இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) செயல்பட்டுவருகிறது. இவ்வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதோடு அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதோடு எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் கால்கடுக்க வந்து வங்கியில் நிற்க வேண்டாம் என்பதற்காக வங்கி சேவைகளில் பலவற்றை ஆன்லைனிலே நடத்திவருகிறது.
இந்நிலையில் தான் கொரோனா காலக்கட்டத்தில் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணிபுரிந்த பணியாளர்கள் சொந்த மாவட்டங்களுக்கு வருகை புரிந்தனர். அப்போது பெரும்பாலான எஸ்.பி. ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளையை சொந்த ஊர்களுக்கே மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தான் எஸ்.பி.ஐ வங்கி, ஆன்லைனிலேயே வங்கி கிளையை மாற்றுவதற்கான செயல்முறைகளை நடைமுறைக்கொண்டு வந்தது.
இதோடு நீங்களும் உங்களது எஸ்.பி.ஐ வங்கிக்கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற நினைத்திருந்தால் இதோ உங்களுக்கான வழிமுறைகள் இங்கே..
முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான onlinesbi.com என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் “Personal banking“ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.இதையடுத்து பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, இப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் பக்கத்தில் e- service என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து Transfer savings Account யை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் மாற்றப்பட வேண்டிய உங்களது கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் IFSC code யை எழுதவும்.
நீங்கள் உங்களது தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்து confirm பட்டனை கிளிக் செய்யவும். இதனையடுத்து நீங்கள் வங்கிக்கணக்குடன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். இதை நீங்கள் என்ட்ரி செய்தவுடன் உங்களது கோரிக்கை சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதை வங்கி நிர்வாகம் சரிபார்த்தவுடனே சில நாள்களுக்குப் பிறகு, நீங்கள் விரும்பி வங்கி கிளைக்கு உங்களது சேமிப்புக் கணக்கு மாற்றம் செய்யப்படும்.
ஆன்லைன் செயல்முறைகள் தவிர YONO, YONO lite போன்ற மொபைல் ஆப்களின் மூலம் உங்களது கிளையை மாற்ற முடியும். முன்னதாக நீங்கள் உங்களது மொபைல் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஏனென்றால் உங்களது மொபைல் எண்ணுக்கு இறுதியாக அனுப்பப்படும் ஓடிபியை வைத்துத் தான் வங்கிக்கணக்கு மாற்றம் செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.