முகப்பு /செய்தி /வணிகம் / "மதுரை மல்லிக்கு ஓர் இயக்கம்" பட்ஜெட் அறிவிப்பால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!

"மதுரை மல்லிக்கு ஓர் இயக்கம்" பட்ஜெட் அறிவிப்பால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

Madurai Malligai | மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.அதில், மதுரையில் புகழ்பெற்ற மல்லிகைப்பூவை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்படும். மல்லிகை மதுரையில் மட்டுமின்றி விருதுநகர் திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய இடங்களில் 4,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும்.தொடர் திட்டமாக ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வகை செய்யப்படும்.

top videos

    மல்லிகை சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நடவு செய்யவும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Agriculture, Jasmine, Madurai, TN Budget 2023