முகப்பு /செய்தி /வணிகம் / UPI பரிவர்த்தனை கட்டணம் யாரிடம் வசூலிக்கப்படும்? தெளிவான விளக்கம் இதோ!

UPI பரிவர்த்தனை கட்டணம் யாரிடம் வசூலிக்கப்படும்? தெளிவான விளக்கம் இதோ!

பணபரிவர்த்தனை

பணபரிவர்த்தனை

UPI transaction : யூபிஐ கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு உண்டா அல்லது வியபாரிகளிடம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜிபே, பேடிஎம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் வழியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் தனி நபர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு உண்டா அல்லது வியபாரிகளிடம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

  • யூபிஐ பணப்பர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது
  • யூபிஐ மூலமாக ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப கட்டணம் இல்லை
  • NPCI வழிகாட்டலின்படி எந்த ஒரு நுகர்வோருக்கும் கட்டணம் பொருந்தாது

என குறிப்பிட்டுள்ளது

முன்னதாக கட்டணம் தொடர்பான அறிவிப்பின்படி, சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணம் வணிகர்களிடம் இருந்து பிடிகப்படும். அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணமும், பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும் கட்டணமும் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: UPI