முகப்பு /செய்தி /வணிகம் / வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடும் போது முழு தொகையையும் கொடுப்பது சரியா?

வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடும் போது முழு தொகையையும் கொடுப்பது சரியா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முத்திரைக் கட்டணத்தைச் சேமிக்க முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தங்கள் அல்லது உயில் போன்ற முறைகளை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்

  • Last Updated :
  • Tamil Nadu |

ஒரு சொத்து வாங்கப்பட்டால், சொத்து பதிவு செய்யப்பட்ட பின்னரே சொத்து மீதான உரிமை சட்டப்படி பரிமாற்றம் செய்யப்படும். இது மிகவும் சிக்கலான சட்ட செயல்முறை என்பதோடு, பல சட்டங்களை உள்ளடக்கியது என்பதால் வாங்குபவருக்கு குறிப்பிடத்தக்க நிதி தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே, இந்தச் சட்டச் செயல்முறையைப் பற்றிய நியாயமான புரிதல் மிகவும் முக்கியமானது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் சொத்தை மாற்றுவதை முறைப்படுத்த, துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பரிவர்த்தனையைப் பதிவு செய்வது மற்றும் முத்திரைத் கட்டணம் போன்ற குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்துவது அவசியம். இந்த செயல்முறை பொதுவாக சொத்து பதிவு என குறிப்பிடப்படுகிறது.

பதிவேட்டை பூர்த்தி செய்யாமல் முழு கட்டண ஒப்பந்தத்தில் மட்டுமே சொத்து வாங்குவது லாபகரமான ஒப்பந்தமா என கேள்வி எழும்.  பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சுதிர் சஹாரன் இது தொடர்பாக தமது கருத்துக்களை நியூஸ் 18 குழுமத்திடம் பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துப்படி முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே சொத்து வாங்குவது நியாயமான ஒப்பந்தம் அல்ல. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சொத்தில் முதலீடு செய்ய விரும்பினால், பதிவு செய்யக்கூடிய சொத்தை வாங்குவது சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.

முத்திரைக் கட்டணத்தைச் சேமிக்க முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தங்கள் அல்லது உயில் போன்ற முறைகளை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்றார். வழக்கறிஞர் சஹாரானின் கூற்றுப்படி, முழு கட்டண ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் உறவை மட்டுமே சார்ந்துள்ளது.

முழு கட்டண ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்து வாங்குவது தன்னைத்தானே உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியாகும். பவர் ஆஃப் அட்டர்னி அல்லது முழு கட்டண ஒப்பந்தம் எந்தவொரு சொத்தின் சட்டப்பூர்வ உரிமையையும் வழங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனிநபர்கள் ஒரு முழு கட்டண ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே சொத்தை உடைமையாக எடுத்துக் கொள்ளும் வழக்குகள் அடிக்கடி எழுகின்றன, அசல் விற்பனையாளர் பின்னர் சொத்தின் உரிமையைக் கோரக் கூடும்.

கூடுதலாக, சொத்து விற்பனையாளர் இறந்த விட்டால், அவர்களின் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள்  மட்டுமே சொத்தின் மீது உரிமை கோர முடியும். இது போன்ற வழக்குகள் அடிக்கடி நிகழ்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், முழு கட்டண ஒப்பந்தத்தை செய்து பணத்தை முதலீடு செய்தவர் பாடு திண்டாட்டம் தான். முழு கட்டண ஒப்பந்தம் சட்டப்பூர்வ உரிமை ஆவணமாக செயல்படாது. மேலும் சொத்து மாற்றத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

இதையும் வாசிக்கரூ.138 முதலீட்டில் ரூ.23 லட்சம் வருமானம்... எல்.ஐ.சி -யின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

இத்தகைய வழக்குகள் பொதுவாக நீதிமன்றத்தில் பலவீனமாகத் தான் இருக்கும். இதனால் பதிவு இல்லாமல், சொத்தின் மீதான உங்கள் உரிமையை நீங்கள் நிரூபிக்க முடியாது. இந்த வழக்கில் சொத்துக்களை இழக்கும் வாய்ப்பு அதிகம்.

வழக்கறிஞர் சஹாரன் கருத்துப்படி, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றால், முழு கட்டண ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்துப் பதிவை மேற்கொள்ள முடியும். அதே நேரம் சொத்தை விற்பவர் முழு கட்டண ஒப்பந்தத்திற்குப் பிறகும் சொத்தைப் பதிவு செய்ய மறுத்தால், ஒப்பந்தத்தை இறுதி செய்ய நீதிமன்றத்தை அணுகலாம். அதிலும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரும்.

இதையும் வாசிக்கசூப்பர் வட்டி.. வரி இல்லை.. தபால் நிலையத்தில் உள்ள லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள்!

top videos

    முழு கட்டண ஒப்பந்தத்தையும் சட்டப்பூர்வமாக பிணைக்க, அது பொருத்தமான முத்திரைத் தாளில் செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் சாட்சிகளின் கையொப்பங்களுடன் வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் கையொப்பமிட வேண்டும். மேலும், சொத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்தால், காசோலை அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் பணம் செலுத்த வேண்டும். இந்த வழிகளில் முழுத் தொகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வாங்குபவரின் கை வலுக்கும். வழக்கு தொடரப்பட்டால் சொத்தை பதிவு செய்ய விற்பவரை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியும் என்கிறார் வழக்கறிஞர் சஹாரன். எனவே முழுத் தொகை ஒப்பந்தத்தை தவிர்ப்பது நலம்.

    First published:

    Tags: Business, Property