முகப்பு /செய்தி /வணிகம் / முதியோர்களுக்கு 9.11% வரை வட்டி வழங்கும் வங்கி.. விவரங்கள் இதோ!

முதியோர்களுக்கு 9.11% வரை வட்டி வழங்கும் வங்கி.. விவரங்கள் இதோ!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பை அதிகரிக்க மற்றும் தங்கள் முதலீட்டின் மீது சிறந்த வருமானத்தை பெற ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Fincare Small Finance Bank) ஆனது, சீனியர் சிட்டிசன்களுக்கான FD திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பை அதிகரிக்க மற்றும் தங்கள் முதலீட்டின் மீது சிறந்த வருமானத்தை பெற ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Fincare Small Finance Bank) ஆனது, சீனியர் சிட்டிசன்களுக்கான FD திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கானது ரூ.2 கோடிக்கும் குறைவான FD-க்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய FD விகிதங்கள் மே 25, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் 1000 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொது மக்கள் 8.51 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம். இதே காலத்திற்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு சீனியர் சிட்டிசன்கள் 9.11 சதவீதம் வரை வட்டி விகிதத்தை பெறுவார்கள்

ஃபிக்ஸட் டெபாசிட்களில் மேற்கண்ட வட்டி விகிதங்களைப் பெற குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ. 5,000-ஆக இருக்க வேண்டும் என்று வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிக FD வட்டி விகிதங்களால் பயனடைய நினைப்போர் நேரடியாக Fincare Small Finance வங்கியின் கிளைக்குச் செல்லலாம் அல்லது வங்கியின் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்-ன் FD வட்டி விகிதங்கள்:

7 முதல் 45 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் ஃபிக்ஸட் டெபாசிட்ஸ்களுக்கு இந்த வங்கி 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரம் 46 முதல் 90 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் ஃபிக்ஸட் டெபாசிட்ஸ்களுக்கு இந்த வம்கியில் 4.50% வட்டி விகிதம் வழங்கப்படும். 91 முதல் 180 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 5.50% வட்டி விகிதத்தை வழங்கும் ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், 181 முதல் 365 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

12 மாதங்கள் முதல் 499 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது 7.50%-ஆகவும், 500 நாட்களில் மெச்சூரிட்டியாகும் FD டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 8.11%-ஆகவும் உள்ளது. 501 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு, வங்கி 7.50 சதவீத வட்டி விகிதத்தை செலுத்துகிறது. 501 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வங்கி 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 18 மாதங்கள், 1 நாள் - 24 மாதங்களில் முதிர்வடையும் டெபாசிட்களுக்கு 7.80% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வங்கி 24 மாதங்கள், 1 நாள் முதல் 749 நாட்கள் வரையிலான FD டெபாசிட்டுகளுக்கு 7.90% வட்டி விகிதத்தை வழங்கும் அதே நேரம் 750 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 8.31% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

30 மாதங்கள் மற்றும் 1 நாள் முதல் 999 நாட்கள் வரையிலான FD-க்களுக்கு 8% வட்டி விகிதத்தையும், 1000 நாட்களில் முதிர்வடையும் டெபாசிட்களுக்கு 8.51% வட்டியையும் வங்கி வழங்குகிறது. 1001 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான மெச்சூரிட்டி கொண்ட டெபாசிட்களுக்கு 8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தவிர Fincare SFB-ஆனது 36 மாதங்கள் முதல் 42 மாதங்கள் வரையிலான FD டெபாசிட்களுக்கு 8.25% வட்டி விகிதத்தையும், 42 மாதங்கள் மற்றும் ஒரு நாள் முதல் 59 மாதங்களில் மெச்சூரிட்டி அடையும் டெபாசிட்டுகளுக்கு 7.50% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. 59 மாதங்கள் 1 நாள் முதல் 66 மாதங்கள் வரையிலான முதிர்ச்சி காலம் கொண்ட டெபாசிட்டுகளுக்கு 8% வட்டி விகிதத்தையும், 66 மாதங்கள் 1 நாள் முதல் 84 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு 7% வட்டியும் வழங்கப்படுகிறது.

சீனியர் சிட்டிசன்களுக்கு...

சீனியர் சிட்டிசன்களுக்கு 7 நாட்கள் முதல் 84 மாதங்கள் வரையிலான முதிர்வு கால டெபாசிட்களுக்கு 3.60% முதல் 9.11% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

First published:

Tags: Bank accounts