முகப்பு /செய்தி /வணிகம் / வாட்ஸ்அப் மூலம் பேங்கிங் சேவைகளை அளிக்கும் எஸ்பிஐ வங்கி..!

வாட்ஸ்அப் மூலம் பேங்கிங் சேவைகளை அளிக்கும் எஸ்பிஐ வங்கி..!

இந்தியாவிலேயே மிகப்பெரும் பொது துறைக கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ வங்கி ஆனது சமீப காலங்களாக ஆன்லைன் மற்றும் மொபைல் மூலமாக பல்வேறு வித சேவைகளை அளித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாட்ஸ்அப் பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவிலேயே மிகப்பெரும் பொது துறை கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ வங்கி ஆனது சமீப காலங்களாக ஆன்லைன் மற்றும் மொபைல் மூலமாக பல்வேறு வித சேவைகளை அளித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாட்ஸ்அப் பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களது எஸ்பிஐ வங்கி கணக்கு மற்றும் இதர தகவல்களை மொபைலில் வாட்ஸ் அப் மூலமாகவே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கியானது கீழ்கண்ட 9 சேவைகளை வாட்ஸ் அப் பேங்கின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

  • அக்கவுண்ட் பேலன்ஸ்
  • மினி ஸ்டேட்மெண்ட்
  • பென்ஷன் ஸ்லிப் சர்வீஸ்
  • கடன் பற்றிய விவரங்கள்
  • சேமிப்பு திட்டங்களைப் பற்றிய விவரங்கள்
  • என் ஆர் ஐ சேவைகள்
  • உடனடியாக கணக்குகளை திறப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விவரங்கள்
  • உதவி மற்றும் குறை தீர்ப்பு சேவை
  • அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றிய விவரங்கள்
top videos

    வாட்ஸ் அப் பேங்கிங் சேவைக்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:

    முதலில் https://bank.sbi என்ற இணையதளத்திற்கு சென்று வாட்ஸ்அப் பேங்கிங் பற்றிய தகவல்களை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்
    பிறகு உங்களது போனை எடுத்து அதில் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் ஐ ஆன் செய்து, திரையில் காண்பிக்கப்படும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.
    இப்போது உங்களது வாட்ஸ் அப் எண்ணில் இருந்து +919022690226 என்று எண்ணிற்கு “Hi” என்று மெசேஜ் அனுப்புமாறு சாட் பாட் உங்களுக்கு கோரிக்கை விடுக்கும்.
    இது மட்டுமல்லாமல் “WAREG<>ACCOUNT NUMBER” என்ற ஃபார்மாட்டில் எஸ் எம் எஸ் ஐ உருவாக்கி +91720893314 என்ற எண்ணிற்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்.
    உங்களது கோரிக்கையானது வெற்றிகரமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கான எஸ்எம்எஸ் ஒன்று உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
    வாட்ஸ் அப் முறையில் நீங்கள் தொடர விரும்பினால், சாட் பாட்டிற்கு Hi என்று மெசேஜ் செய்தாலே அதன் பிறகு அதன் வழிகாட்டுதலின்படி உங்களால் வாட்ஸ் அப் பேங்கிங் பற்றிய சேவைகளை மொபைலிலேயே பெற முடியும்.
    இவ்வாறு பேங்கிங் வசதியை பெறுவதற்கு உங்களது மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ் எம் எஸ் அனுப்பும்போது சரியான ஃபார்மாட்டில் எஸ்எம்எஸ் அனுப்பினால் மட்டுமே உங்களது கோரிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
    ஒருவேளை உங்களது மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை எனில் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் அவசியமானதாகும்.
    First published:

    Tags: Bank, SBI