பணத்தை இரட்டிப்பு செய்வதற்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அந்த வரிசையில் சூப்பரான திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி. எஸ்பிஐ வங்கி பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பொது வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன? இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund):
பொது வருங்கால வைப்பு நிதி, எதிர்காலத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு திட்டம் ஆகும். PPF கணக்குகளுக்கு முதிர்ச்சி காலம் 15 வருடங்களாக உள்ளது. வெறும் 500 ரூபாயில் தொடங்கி ரூ.1,50,000 வரை 1 வருடத்தில் டெபாசிட் செய்யலாம். இதனால் பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கும். கணக்கு தொடங்கி 3 வருடங்கள் முதல் 6 வருடங்கள் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. மேலும் முதிர்ச்சி காலம் முடிந்து பின்னர் 5 வருடங்கள் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம். பெறப்படும் முதிர்ச்சி தொகைக்கும் வரி விலக்கும் உள்ளது.
PPF கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் :
முதன்மையான வங்கிகளில் எஸ்பிஐ வங்கியும் ஒன்று. பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை எஸ்பிஐ சேமிப்பு திட்டங்கள் வழங்குகின்றன. எஸ்பிஐ PPF கணக்குகளுக்கு என்று 7.1 சதவீத வட்டி வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால், PPF கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம்.
PPF கணக்கு தொடங்கி 5 வருடம் வரை பணத்தை எடுக்க முடியாது. 15 வருடங்கள் முடிவதற்கு முன்னால் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தால், 1 சதவீதம் தொகையில் இருந்து பிடிக்கப்படும்.
Also Read : அதிக வட்டி கொடுக்கும் 3 முக்கிய வங்கிகள்.. விவரம் இதோ!
யாரெல்லாம் PPF கணக்கு தொடங்கலாம் ?
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை PPF கணக்கைத் தொடங்க முடியும். 18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கணக்கை தொடங்கலாம்.
எப்படித் தொடங்குவது ?
ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், புகைப்படம் போன்றவற்றின் மூலம் இந்த கணக்கைத் தொடங்கலாம். அதே போல், எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் ஆன்லைனில் PPF கணக்கைத் தொடங்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.