வங்கிகளின் செயல்பாடுகளும், சேவைகளும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சிக்கும், பல்வேறு இயக்கங்களும் மிகவும் அவசியம். பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் என்று பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில வங்கிகள் Domestically systematically important banks) – D-SIBs என்று, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என்று சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.உள்நாட்டு அமைப்பு ரீதியாக மிகவும் முக்கியமான வங்கிகளாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளன.
D-SIBs என்று சுருக்கமாகக் கூறப்படும் இந்தப் பட்டியலில், 2015ம் ஆண்டு எஸ் பி ஐ வங்கியும், 2016ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியும், 2017 ம் ஆண்டு ஹெச்டிஎப்சி வங்கியும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டு வங்கிகள் என்பதால் D-domestic என்ற குறியீட்டோடு இவை அழைக்கப்படுகின்றன. இதே வெளிநாட்டு வங்கிகள், இந்தியாவில் பிரதானமாக செயல்பட்டு வந்தால், அவை G-global என்ற குறியீட்டோடு, G-SIB என்று கூறப்படும். D-SIB என்று பட்டியலிடப்படும் வங்கிகளைக் கையாள்வதற்கான கட்டமைப்பு மற்றும் வெவ்வேறு அளவுகோல்கள் ஜூலை மாதம் 2014 ஆம் ஆண்டில் வெளியானது. அதற்குப் பிறகு, ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கிகளை D-SIB வங்கிகளாக நியமிக்கிறதோ அதன் பெயர்களை வெளியிட வேண்டும்.
தொடர்ந்து, இந்த வங்கிகளின் சிஸ்டமிக் இம்பார்டன்ஸ் ஸ்கோர்ஸ் (SIS) என்பதன் அடிப்படையில், இவற்றை பொருந்தக்கூடிய பிரிவுகளில் வைக்க வேண்டும்.இந்த வங்கிகள் எந்தெந்த பிரிவுகளில் வைகப்பட்டுள்ளனவோ, அதற்கு பொருத்தும் ஈக்விட்டியையும் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டு வங்கிகளுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வங்கிகளும் குறிப்பிட்ட கட்டமைப்பின் கீழ் தகுதி பெற்றால், இதில் இடம்பெறலாம். அதைப் பற்றிய விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் வழங்கியுள்ளது.இந்தியாவில், உலகளாவிய அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கியாக ஒரு வங்கி குறிப்பிட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தால், அந்த வங்கி, G-SIB என்று குறிப்பிடப்படும்.
Read More : ரூ.5000 சேமித்தால் ரூ.8 லட்சம் வருமானம்... போஸ்ட் ஆபிஸின் சூப்பரான சேமிப்புத் திட்டம்!
அவ்வாறு tag செய்யப்படும் வங்கிகள், CET-1 என்ற அளவீட்டின் கீழ், இந்தியாவில் கூடுதலாக மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும்.வெளிநாட்டு வங்கி என்பதால், CET1 என்பதில், ஈக்விட்டி பங்குகள் / முதலீடு தவிர்த்து, எளிதாக பணமாக்கக் கூடிய சொத்துக்களைக் குறிக்கிறது. லிக்விட் சொத்துக்கள், ரொக்கம் மற்றும் ஸ்டாக் ஆகியவை அடங்கும். கேப்பிட்டல் சர்சார்ஜ் என்று அழைக்கப்படும் இந்த முதலீடு, இந்தியாவில் உள்ள இடர் எடையுள்ள சொத்துக்களுக்கு (Risk Weighted Assets) இணையாக இருக்க வேண்டும். வங்கியில் சில காரணங்களால் ஏதேனும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஈடு செய்ய, இந்த CET1 இல் குறிப்பிடப்பட்டுள்ள லிக்விட் முதலீடுகள் பயன்படுத்தப்படும்.
G-SIB இல் பட்டியலிடப்படும் வெளிநாட்டு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த CET1 முதலீட்டு கட்டமைப்பு போலவே, D-SIBஇல் சேர்க்கப்பட்டுள்ள உள்நாட்டு வங்கிகளுக்காண விதிகளும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. இது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த CET1 மூலதனம் என்பது கூடுதல் மூலதனமாகும். இடர் மதிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களின் அடிப்படையில், கூடுதல் CET1 என்பது எஸ்பிஐ வங்கிக்கு 0.6%, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்ஸி வங்கிகளுக்கு தலா 0.2% என்றும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.