முகப்பு /செய்தி /வணிகம் / எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா?.. EMI குறித்து வங்கி வெளியிட்ட அப்டேட்!

எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா?.. EMI குறித்து வங்கி வெளியிட்ட அப்டேட்!

எஸ்பிஐ வங்கி கடன் வட்டிவிகிதம் மாற்றம்.. முழு விவரம் இங்கே!

எஸ்பிஐ வங்கி கடன் வட்டிவிகிதம் மாற்றம்.. முழு விவரம் இங்கே!

sbi home loan eligibility calculator | கடன் தொகையை வசூலிக்க வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும். வங்கி கடன் தள்ளுபடி செய்வது என்பது கடனை முழுமையாக ரத்து செய்வதல்ல. கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் மிகப்பெரிய அரசு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ உள்ளது. அந்தவகையில், மக்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தனிநபர் வாங்கி கடன், வீட்டுக் கடன், கார் கடன் என பல வகையான கடன்களை குறைந்த வட்டிக்கு மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்றவர்கள் அதிகம். அவர்கள் பெற்றுள்ள தொகையும் அதிகம்.

ஆனால், வங்கி வீட்டுக் கடனை சரியானவர்கள் பற்றிய தகவலை பார்த்தால்... கடந்த ஐந்தாண்டுகளில் வாங்கி கடனை திருப்பிச் செலுத்தியவர்களை விட, இஎம்ஐ கட்டாதவர்களின் எண்ணிக்கை அதிகம். 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 2022-23 வரை, எஸ்பிஐயில் சுமார் 1,13,603 பேர் தங்கள் EMI-யை சரியாக செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ. 7655 கோடி ஆகும். இதற்கு காரணம் கொரோனா தொற்று கூட காரணமாக இருக்கலாம்.

கொரோனா உள்ளிட்ட பல காரணிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் பலர் தங்களின் வேலையை இழந்தது கூட காரணமாக இருக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில், எஸ்பிஐ சுமார் ரூ. 2178 கோடி மதிப்பிலான 45,168 வீட்டுக் கடன் கணக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவரம் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விஷயங்களை ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் பெற்றுள்ளார்.

Also Read | வருமான வரி தாக்கல் செய்யும் முன் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்யுங்க.. விவரம் இதோ!

இது குறித்து அவர் கூறுகையில்.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 2018-19 இல் ரூ. 237 கோடி, 2019-20 இல் ரூ. 192 கோடி, 2020-21 இல் ரூ. 410 கோடி, 2021-22 இல் ரூ. 642 கோடி, 2022-23 இல் ரூ. 697 கோடி வீட்டுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

top videos

    தொழில்நுட்ப ரீதியாக வங்கி கடனை தள்ளுபடி செய்தாலும், கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று வங்கி நிபுணர்கள் கூறுகின்றனர். கடன் தொகையை வசூலிக்க வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும். வங்கி கடன் தள்ளுபடி செய்வது என்பது கடனை முழுமையாக ரத்து செய்வதல்ல. கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இல்லையெனில், வங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

    First published:

    Tags: SBI, SBI Bank, SBI Loan