முகப்பு /செய்தி /வணிகம் / அமெரிக்க டாலரை வீழ்த்தப்போகும் இந்திய கரன்சி..! - இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள 18 நாடுகள் சம்மதம்!

அமெரிக்க டாலரை வீழ்த்தப்போகும் இந்திய கரன்சி..! - இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள 18 நாடுகள் சம்மதம்!

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

18 நாடுகளில், முக்கியமாக ரஷ்யா உள்ளூர் நாணய வர்த்தகத்தை மேம்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

உலக வர்த்தகத்தில் டாலர் மீதான மோகத்தையும் அதை சார்ந்து இருக்கும் தன்மையையும் குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கோள்வதற்கும், அதன் செயல்முறையை பயன்படுத்துவதற்கும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் பகவத் காரத், பதிவுகளின்படி, சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கியான RBI- ரஷ்யா மற்றும் இலங்கை உட்பட 18 நாடுகளில் உள்ள 60 வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளதாக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டாலர் மயமாக்கங்களில் இருந்து விலக நினைக்கும் 18 நாடுகளில், முக்கியமாக ரஷ்யா உள்ளூர் நாணய வர்த்தகத்தை மேம்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். ரூபாய் பரிவர்த்தனை மூலம் ஏற்றுமதி-இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால் அதன் மூலம் இந்தியாவிற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய சம்மதித்துள்ள 18 நாடுகள்:

ரஷியாசிங்கப்பூர்இலங்கை
உகாண்டாகயானாபிஜி
போட்ஸ்வானாஜெர்மனிகென்யா
மொரிஷியஸ்இஸ்ரேல்மலேசியா
நியூசிலாந்துமியான்மர்ஓமன்
சீஷெல்ஸ்தான்சானியாஐக்கிய இராச்சியம்.

சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ (Vostro) கணக்கு அல்லது SRVA என்றால் என்ன?

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய ரூபாயில் (INR) எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டபோது SRVA களின் செயல்முறை தொடங்கியது. அத்ன்படி வர்த்தகத்தின் போது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் பங்குதாரர் வர்த்தகம் செய்யும் நாட்டின் வங்கிகளின் SRVAகளைத் திறக்க வேண்டும்.

இந்தக் கணக்குகள் இந்திய வங்கியில் வெளிநாட்டு நிறுவனம் வைத்திருக்கும் தொகையை இந்திய ரூபாய் மதிப்பில் வைத்திருக்கும். ஒரு இந்திய இறக்குமதியாளர் வெளிநாட்டு வர்த்தகருக்கு ரூபாய்களில் பணம் செலுத்தும்போது, ​​அந்தத் தொகை இந்த வோஸ்ட்ரோ கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதேபோல், ஒரு இந்திய ஏற்றுமதியாளர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ரூபாய்களில் செலுத்த வேண்டியிருக்கும் போது, ​​இந்த வோஸ்ட்ரோ கணக்கிலிருந்து தொகை கழிக்கப்பட்டு, ஏற்றுமதியாளரின் வழக்கமான கணக்கில் செலுத்தப்படும்.

இந்து புதிய ரூபாய் பயன்பாடு ஏற்பாட்டை பிரபலப்படுத்த SRVAs வைத்திருப்பவர்கள் தங்கள் உபரி இருப்பு தொகையை இந்திய அரசாங்கப் பத்திரங்களில்(government securities) முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு அரசின் பாத்திரங்களின் மதிப்பையும் அதிகரிக்கும். அதோடு ரூபாய் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய வணிகர்கள் ஆர்வம் காட்டுவர் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் பாருங்க; மின்சார வாகன சந்தையில் அடுத்த புரட்சிக்கு தயாராகும் இந்தியா!

பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" மேற்கொண்டதைத் தொடர்ந்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த பின்னர் மற்ற நாடுகளுடன் வர்த்தக தீர்வுக்கு INR பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

First published:

Tags: Indian Rupee, RBI