முகப்பு /செய்தி /வணிகம் / வங்கி லாக்கரில் பணம் வச்சிருக்கீங்களா...? இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

வங்கி லாக்கரில் பணம் வச்சிருக்கீங்களா...? இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

வங்கி லாக்கரில் வைக்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்கள் பொறுப்பல்ல என்று நேரடியாகச் சொல்லி வந்தன வங்கிகள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கி லாக்கர்களில் மதிப்புமிக்க பொருட்களை வைப்பது இந்தியாவில் அவ்வளவு சாதாரணம் இல்லை. இருப்பினும், பல நேரங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. விலையுயர்ந்த நகைகள் அல்லது பணம் உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைக்கலாம். வீட்டு உரிமையாளர் உங்களுக்கு வீட்டை கொடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம், அப்படியெனில் அங்கு நீங்கள் வைத்திருக்கும் எந்தப் பொருளும் சேதமடைந்தால், அதற்கு வீட்டு உரிமையாளர் பொறுப்பேற்க மாட்டார். இதே வாதம் தான் வங்கி லாக்கருக்கும். இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டு வங்கிகளின் பொறுப்புகளை நிர்ணயம் செய்தது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பெண் ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) லாக்கரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சத்தை கரையான்கள் அரித்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. அந்தப் பெண் லாக்கரைச் சென்று பார்த்தபோது, ​​நோட்டு கட்டு சேதமடைந்திருப்பதைக் கண்டார். ரூ.2 லட்சம் சேதமடைந்த  நிலையில் ரூ.15,000 முற்றிலும் வீணாகியிருந்தது. வங்கியில் 15 ஆயிரம் ரூபாயை மாற்றிக் கொடுத்தனர். ரிசர்வ் வங்கியின் புதிய வங்கி லாக்கர் விதிகளால் இது நடந்தது.

2022-க்கு முன், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள உங்களின் சொத்து சேதம் அடைந்தால், அதற்கு வங்கி இழப்பீடு வழங்கும் என்ற விதி எதுவும் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டது. இது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வந்தது.

இந்த விதிகளுக்கு முன், வங்கி லாக்கரில் வைக்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்கள் பொறுப்பல்ல என்று நேரடியாகச் சொல்லி வந்தன வங்கிகள். எந்த சூழ்நிலையிலும் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதம் அடைந்தால், எந்த இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில், புதிய விதிகளின்படி, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்தால், லாக்கரின் ஆண்டு வாடகையை விட 100 மடங்கு வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும். வங்கியில் திருட்டு, கொள்ளை, தீ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்து, வங்கியின் அலட்சியம் தெளிவாகத் தெரிந்தால், அதன் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, இந்த ஆண்டு முதல் தேதியில் இருந்து புதிய லாக்கர் ஒப்பந்தமும் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையே இருக்கும். புதிய விதிகளின்படி, லாக்கரைப் பெற வாடிக்கையாளர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, புதிய ஒப்பந்தம் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் புதிய லாக்கர் விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஒப்பந்தத்தில் நியாயமற்ற விதிமுறைகளை வைத்திருக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Bank, Bank Locker