முகப்பு /செய்தி /வணிகம் / 50 கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ விரைவில் பெறும்… பிரபல ஆய்வறிக்கையில் தகவல்

50 கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ விரைவில் பெறும்… பிரபல ஆய்வறிக்கையில் தகவல்

ஜியோ

ஜியோ

2016 ஆண்டு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்தது. அடுத்த ஓராண்டுக்குள்ளாக ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் விரைவில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெறும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை டேட்டா, கால் செய்யும் வசதி உள்ளிட்டவற்றை அளித்து டெலி காம் துறையில் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் சிறப்பான சேவையால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியை மற்ற பல நிறுவனங்களும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன. டெலிகாம் துறையில் புதுமையை புகுத்துதல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சேவைகளை குறைந்த விலையில் அளித்தல் உள்ளிட்டவை ஜியோவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Also Read : மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

இந்த நிலையில் 2026 ஆம் நிதியாண்டுக்குள் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாக இருப்பார்கள் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான சான்ஃபோர்டு சி பென்ஸ்டெய்ன் கூறியுள்ளது.

top videos

    2016 ஆண்டு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்தது. அடுத்த ஓராண்டுக்குள்ளாக ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. ஒட்டுமொத்தமாக டெலிகாம் துறையில் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 80 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன.

    First published:

    Tags: Jio