சில வருடங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கு தொடங்கி பணத்துடன் அப்படியே விட்டுவிட்டீர்களா? ஆர்பிஐ உங்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
பல வருடங்களாகக் கவனிக்கப்படாத வங்கிக் கணக்குகள், வைப்புத் தொகைக் கணக்குகள் போன்றவற்றை அடையாளம் கண்டு உரியவர்களிடம் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி தற்போது 100 நாள் பிரசாரத்தை அறிவித்துள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, 10 வருடங்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்புத் தொகை கணக்குகள் போன்றவற்றைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் 100 கணக்குகள் கண்டறியப்பட்டு, அதனின் உரிமையாளர்களை வங்கித் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பி அளிக்கவுள்ளனர். இந்த நடவடிக்கை ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளில் உள்ள தொகையை மீண்டும் சரியான உரிமையாளர்களிடம் அளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பொதுவாக இணையத்தளம் உருவாக்கப்பட்டு அதில் இந்த தகவல்கள் பதிவிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த இணையத்தளம் மூலம் தங்கள் கைவிடப்பட்ட பழைய வங்கிக் கணக்குகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்த 100 நாள் campaign மூலம் நெடுநாளாக உபயோகத்தில் இல்லாத கணக்குகளில் உள்ள பணத்தை மக்கள் மீண்டும் பெற்றுகொள்ள முடியும்.
Also Read : வட்டி உயர்வு… முதியோருக்கான திட்டங்களில் சூப்பர் சேமிப்பு.. DCB வங்கியின் அறிவிப்புகள்!
பிப்ரவரி 2023 தகவலின் படி, நாடு முழுவதும் இருந்து 10 வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் இல்லாத 10.24 கோடி கணக்குகளில் இருந்து ரூ.35 ஆயிரம் கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.8,086 கோடியும், பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் இருந்து ரூ.4,558 கோடியும் மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து 3,904 கோடியும் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accounts, Bank accounts, RBI