முகப்பு /செய்தி /வணிகம் / முதலீடு கம்மி.. ரூ.2.25 லட்சம் வட்டி.. தபால் நிலைய சேமிப்பில் சூப்பர் திட்டம்!

முதலீடு கம்மி.. ரூ.2.25 லட்சம் வட்டி.. தபால் நிலைய சேமிப்பில் சூப்பர் திட்டம்!

அஞ்சல் நிலைய சேமிப்பு

அஞ்சல் நிலைய சேமிப்பு

POTD என்னும் அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டம் பாதுகாப்பான மற்றும் அதிக அளவிலான வருவாயைப் பெற்றுத் தருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அரசு வழங்கும் சில சேமிப்பு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குகின்றன. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்திய அஞ்சல் வழங்கும் தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் மூலம் எளிமையான முறையில் அதிக லாபத்தில் பணத்தைச் சேமிக்கலாம். நிலையான வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த வழி. இந்தத் திட்டம் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அளவு கொண்டு முதலீட்டில் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. இதில் முதலீடு செய்வதும் மிகவும் எளிதானது. அஞ்சலக நேர வைப்புத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளில் ரூ.2.25 லட்சத்தை வட்டியாகப் பெறலாம்.

தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் (POTD) வங்கிகளில் நிலையான வைப்புத்தொகையைப் போன்று செயல்படுகிறது. இது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என நான்கு காலகட்டங்களில் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் ஆனால் ஆண்டுதோறும் செலுத்தப்படும். தற்போதைய வட்டி விகிதங்கள் 1 வருடத்திற்கு 6.8%, 2 ஆண்டுகளுக்கு 6.9%, 3 ஆண்டுகளுக்கு 7% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5%. குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 மற்றும் அதிகபட்ச வரம்பு இல்லை.

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், ஐந்தாண்டுக் கால வைப்புகளுக்கு வரி விலக்கு கிடைக்கும். முதலீட்டாளர்கள் ஐந்து வருடக் கால அவகாசத்துடன் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும். அதாவது அவர்களின் சராசரி ஆண்டு வருமானம் 7.71 விழுக்காடு ஆகும். இதனுடன், முதலீட்டாளர்கள் முதிர்வு நேரத்தில் அசல் தொகையையும் பெறலாம். அதாவது ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஐந்தாண்டுகளுக்கான வட்டி மற்றும் அசலை சேர்த்து சுமார் ரூ.7.25 லட்சம் பெறலாம்.

ஒரு தபால் அலுவலக நேர வைப்புத் திட்டமானது, வங்கியின் ஃபிக்சட் வைப்புத்தொகை போன்றது. காலாண்டு அடிப்படையில் வட்டி விகித திருத்தங்களைக் கொண்டுள்ளது. வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8% முதல் 7.5% வரை அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஆனால் இந்த வட்டி விகித திருத்தங்களுக்கும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்திற்கும் தொடர்பு இல்லை.

Also Read : Gold rate today : மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்...!

இதனால் இந்த சேமிப்புத் திட்டம் வருவாய் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இந்தக் கணக்கைக் கால முதிர்வுக்கு முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் முடியும். தபால் அலுவலக நேர வைப்பு கணக்கை முதிர்ச்சியடைந்த பிறகு நீட்டிக்கவும் முடியும். அவசரக் காலங்களில், இந்தத் திட்டத்தில் உள்ள நிதியைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இந்த சேமிப்புத் திட்டம் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான முறையில் அதிக வருமானம் வழங்கும் ஒரு சிறந்த திட்டமாகும்.

First published:

Tags: Post Office, Savings