முகப்பு /செய்தி /வணிகம் / குறைந்த காலத்தில் அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டம் - குழந்தைகள் கூட தொடங்கலாம்..

குறைந்த காலத்தில் அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டம் - குழந்தைகள் கூட தொடங்கலாம்..

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அரசு வழங்கிவருகிறது. அந்த வகையில் குறுகிய காலச் சேமிப்பு திட்டங்களில் சிறுவர்கள் கூட சேமிக்கும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்திய காலத்தில் பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும் என்றால், அதற்குச் சரியானவை அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் தான். பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சல் துறை வழங்கிவருகிறது. அதில் சில திட்டங்கள் தனியார் வங்கிகளில் வழங்குவதை விட அதிக வட்டி வழங்குகின்றனர்.

அப்படி ஒரு சூப்பரான திட்டம் தான் தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு. இந்த திட்டத்தில் 10 வயது நிரம்பிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு அதிகபட்ச வட்டியாக 7.5 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு : National Savings Time Deposit Account(TD) 

இந்த திட்டத்தில் சேர ஒரு நபர் கணக்கைத் தொடங்கலாம். அல்லது 3 பேர் அளவில் கொண்ட கூட்டுக் கணக்கைக் கூட தொடங்கலாம். 10 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளின் பெயர்களில் பெற்றோர்கள் கூட கணக்கைத் தொடங்கலாம். குறிப்பாக 10 வயதிற்கு அதிகமாக உள்ள குழந்தைகள் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கிச் சேமிக்கலாம்.

மேலும், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்துக்கொள்ளலாம். 1, 2, 3 மற்றும் 5 வருடங்கள் அடிப்படையில் இத்திட்டம் வழங்கப்படுகிறது. குறைந்தது ரூ.1000 முதல் கொண்டு சேமிக்கலாம். இதில் வருடத்திற்கு ஏற்ற வட்டி வழங்கப்படும்.

வட்டி விகிதம் :

1 ஆண்டுகள் – 6.8 சதவீதம்

2 ஆண்டுகள் – 6.9 சதவீதம்

3 ஆண்டுகள் – 7.0 சதவீதம்

5 ஆண்டுகள் – 7.5 சதவீதம்

கணக்கு முதிர்ச்சியடைந்த பின்னர் கணக்கின் கால அவகாசத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். அதே போல், கணக்கு தொடங்கி 6 மாதங்கள் முன்பு மூடமுடியாது. 1 வருடத் திட்டத்தில் 6 மாதங்களில் கணக்கை மூடினால், அந்த தொகைக்கான வட்டி சேமிப்பு திட்டத்தின் அடிப்படையில் தரப்படும். மேலும் 5 ஆண்டுக் கால டெபாசிட்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80-சி விலக்குக்குத் தகுதி பெறுகின்றன.

Also Read : ரூ.1000 முதல் முதலீடு.. வட்டியோ அதிகம்.. 2 மடங்கு லாபம் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கைத் தொடங்குவது எப்படி?

top videos

    இந்த திட்டத்தில் கீழ் சேமிப்பு கணக்கை உங்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் முறையான ஆவணங்கள் தொடங்கலாம். அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குடன் இத்திட்டத்தில் குறைந்தது ரூ.1000 முதல் கொண்டு 1,2,3 அல்லது 5 வருடச் சேமிப்பைத் தொடங்கலாம்.

    First published:

    Tags: Post Office, Savings