முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.1000 முதல் முதலீடு.. வட்டியோ அதிகம்.. 2 மடங்கு லாபம் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

ரூ.1000 முதல் முதலீடு.. வட்டியோ அதிகம்.. 2 மடங்கு லாபம் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

நிலையான 7.5 சதவீதத்தில் முதலீடு தொகைக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் சேமிப்பு திட்டம் பற்றி இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேமிப்பு என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய அதிகரிக்கும் விலைவாசிக்கு நடுவில், நாம் வாங்கும் சம்பளத்தில் சேமிக்க வேண்டும், அதே சமயம் அது எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் நம்பியான திட்டமாக இருக்க வேண்டும். இப்படி ஒரு வசதியை உங்களுக்கு மத்திய அரசே வழங்குகிறது. மிகவும் நம்பகமான சேமிப்பு திட்டமான அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்கள் வங்கிகளை விட அதிக வட்டியை வழங்கி வருகின்றன.

உங்கள் வருமானத்தில் வெறும் மாதம் ரூ.1000 கொண்டு இது போன்ற சேமிப்புகளில் நீங்கள் ஈடுபடலாம். ஒரு சில அஞ்சலக திட்டத்தில் நாம் எதிர் பார்ப்பதை விடவும் பல மடங்கு வட்டி கிடைப்பதால், நாம் செலுத்தும் பணம் இரு மடங்காக நமக்குக் கிடைக்கும். அப்படி ஒரு சூப்பரான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா அஞ்சலக திட்டம் (Kisan Vikas Patra scheme).

இந்த திட்டத்தின்படி, நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் மொத்தமாகச் செலுத்தலாம். இது ஒரு முறை மட்டும் பணம் செலுத்தும் திட்டமாகும். வங்கிகளில் உள்ள ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்று தான் இந்த திட்டமும். ஆனால் இதில் அதை விட அதிக லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை எடுக்க முடியாது. அதாவது 124 மாதங்கள் முடிந்த பிறகு தான் இந்த பணத்தை நீங்கள் எடுக்கலாம்.

இத்திட்டத்தில் கணக்கு தொடங்க தகுதிகள் என்ன?

18 வயதை நிரம்பியவர்கள் இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதுகாவலர் கீழ் ஜாயிண்ட் அக்கவுண்டாக இதில் சேரலாம். அதிகபட்சம் ஒரு கிசான் விகாஸ் பத்ரா அக்கவுண்ட்டில் மூன்று பேர் வரை பதிவு செய்யலாம். அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இத்திட்டம் மூலம் தொடங்கி கொள்ளலாம்.

இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் கடந்த ஆண்டு வரை கொரோனாவின் காரணமாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இதற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக மீண்டும் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் எல்லோருக்கும் முதலில் செலுத்திய பணத்தை விடவும் இருமடங்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும். குறிப்பாக இதில் எந்த வித ஆபாயமும் கிடையாது.

இந்த திட்டத்தின் வருமானம் முற்றிலும் வரிக்கு உட்பட்டது. ஆனால் முதிர்வு காலம் முடிவடையும் போது, மொத்த தொகையில் இருந்து கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source) திரும்பப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டமானது 80C விதிகளின் வரி விலக்குகளில் வராது. ஆரம்பத்தில் இந்த திட்டமானது, மழை காலத்தில் போதுமான சேமிப்பு இல்லாத விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டது. அதன் பிறகு எல்லா தரப்பினரும் இதில் முதலீடு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் முதலீடு செய்ய எந்த வித அதிகபட்ச வரம்பும் கிடையாது.

Also Read : அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்.. எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. முழு விவரம்!

எப்படி கணக்கு தொடங்க வேண்டும்?

இந்த திட்டத்திற்கு உங்கள் ஏரியாவில் இருக்கும் அஞ்சல் நிலையங்களில் மூலமாகவே எளிமையாக விண்ணப்பிக்கலாம். முகவரிக்கு மற்றும் பெயர் சான்றிதழ்களுக்கான ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

top videos

    எளிமையான முறையில், உங்கள் சேமிப்பு தகுதி ஏற்ற அதிக லாபம் பெறும் விதத்தில் இந்த சேமிப்பு கணக்கு இருக்கிறது. இதனை முறையாக பயன்படுத்திகொண்டு உங்களின் குழந்தைகளுக்கான கல்வி தேவைகளுக்கு தற்போது இருந்தே சேமிக்கலாம்.

    First published:

    Tags: India post, Post Office, Savings