இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமத்து மக்களின் பிரதானத் தொழிலாக உள்ளது விவசாயம். அயராது உழைத்து நாட்டு மக்களின் வளங்களைப் பாதுகாக்கும் நம் விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை நடமுறைக்கு கொண்டு வந்தது.
அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜான என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத் திறனை ஆதரிக்கும் வகையில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2 ஆயிரம் என 3 தவணைகளாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை மத்திய அரசின் கீழ் 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எப்போது 14 வது தவணைத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள் காத்துள்ளனர்.
Read More : வட்டி உயர்வு… முதியோருக்கான திட்டங்களில் சூப்பர் சேமிப்பு.. DCB வங்கியின் அறிவிப்புகள்!
ஆனால் இதற்கான அறிவிப்பு தேதி இன்னமும் உறுதியாகவில்லை. இருந்தப்போதும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் படி, 14 வது தவணைத் தொகையானது வருகின்ற மே 26 ஆம் தேதி முதல் மே 31 ஆம் வரை எந்த நேரத்திலும விநியோகிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
PM கிசான் யோஜனா பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது?:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.