தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப்ஓ (EPFO)வின் வட்டி விகிதம் கடந்த 2018-19ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டு 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்க அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்த வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டு, 8.1%ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அப்போதும் வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள EPFO அலுவலகத்தில் அந்நிறுவன அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க : மாதக் கடைசியில் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி..?
இதில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில் தற்போது உள்ள வட்டி விகிதமான 8.1 சதவீதத்தில் இருந்து, 8.15 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு | வட்டி விகிதம் |
2018-19 | 8.65% |
2019-20 | 8.50% |
2021-22 | 8.10% |
2022-23 | 8.15% |
இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்கும் சுமார் 7 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Epfo, PF, PF AMOUNT, PROVIDENT FUND