முகப்பு /செய்தி /வணிகம் / ஆன்லைனில் PF கணக்கை மாற்றிக் கொள்ளுதல்..! எளிதாக பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறைகள்..

ஆன்லைனில் PF கணக்கை மாற்றிக் கொள்ளுதல்..! எளிதாக பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறைகள்..

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

PF மூலம் கிடைக்க கூடிய சேமிப்பு மற்றும் பலன்களை தொடர்ச்சியாக அனுபவிக்க, நீங்கள் ஒரு வேலையில் இருந்து வேறொரு வேலைக்கு மாறும்போது உங்கள் PF கணக்கை மாற்றிக் கொள்வது அவசியம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

PF மூலம் கிடைக்க கூடிய சேமிப்பு மற்றும் பலன்களை தொடர்ச்சியாக அனுபவிக்க, நீங்கள் ஒரு வேலையில் இருந்து வேறொரு வேலைக்கு மாறும்போது உங்கள் PF கணக்கை மாற்றிக் கொள்வது அவசியம்.PF கணக்கு என்பது ஒரு சேமிப்புக் கணக்காகும். பெரும்பாலும், நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் பலருக்கு தங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி PF கணக்கிற்கு செலுத்தப்படும். ஆனால், நீங்கள் ஒரு வேலையில் இருந்து வேறொரு வேலைக்கு மாறும்போது, PF மூலம் கிடைக்க கூடிய சேமிப்பு மற்றும் பலன்களை தொடர்ச்சியாக அனுபவிக்க, உங்கள் PF கணக்கை உங்கள் புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வது அவசியம்.

அதே போல், உங்கள் PF கணக்கை இவ்வாறு மாற்றிக் கொள்வதன் மூலம், உங்கள் ஓய்வூதியம், ரீஃபண்ட், மற்றும் திரட்டப்பட்ட இருப்புக்கு எதிரான கடன் போன்ற பலன்களை அனுபவிக்கலாம்.

Read More : ஆதார் அடையாள அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றனுமா..? இதோ வழிமுறைகள்

பின்வரும் இந்த ஆறு வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் ஆன்லைனில் PF கணக்கை மாற்றிக் கொள்ளலாம் :

top videos

    EPFO ​​இன் ஒருங்கிணைந்த போர்ட்டல் (உறுப்பினர் இடைமுகம்) ஆன https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்பதை கிளிக் செய்து, உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து கொள்ளுங்கள்.

    ஆன்லைனில் PF கணக்கை மாற்றிக் கொள்ளுதல்..! எளிதாக பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறைகள்..
    உள்நுழைந்த பின்னர், நீங்கள் ஆன்லைன் சேவைகளின் கீழ் உள்ள ‘One Member – One EPF Account (Transfer Request)’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
    அடுத்து, தற்போதைய வேலைக்கான PF கணக்கு மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டும்.
    முந்தைய வேலையின் PF கணக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘Get details/விவரங்களைப் பெறவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
    உரிமைகோரல் படிவத்தை சான்றளிக்க, DSC வைத்திருக்கும் கையொப்பமிட அங்கீகாரம் பெற்ற நபரின் அடிப்படையில் உங்களின் முந்தைய வேலை வழங்குநர் அல்லது தற்போதைய வேலை வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பங்களைப் பெறுவீர்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து உங்கள் உறுப்பினர் ஐடி/UAN-ஐ உள்ளிட்ட வேண்டும்.
    உங்கள் UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐப் பெறுவதற்கு நீங்கள் 'Get OTP/OTPஐப் பெறவும்' என்பதை கிளிக் செய்யவும். OTP வந்தவுடன் அதனை உள்ளிட்டு Submit/சமர்ப்பிக்கவும் என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
    இந்த செயல்முறையை நீங்கள் நிறைவு செய்த பின்னர், உங்கள் வேலை வழங்குநர் போர்ட்டலில் உங்கள் EPF கணக்கை மாற்றுவதற்கான கோரிக்கையை டிஜிட்டல் முறையில் அங்கீகரிப்பார். அடுத்து, நீங்கள் படிவம் 13 ஐ பூர்த்தி செய்து, PDF வடிவத்தில் இருக்கும் மாற்றுதல் கோரிக்கையைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் PF மாற்றுதல் கோரிக்கை படிவத்தின் கையொப்பமிடப்பட்ட நகலை தேர்ந்தெடுத்த வேலை வழங்குநரிடம் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
    First published:

    Tags: PF, Savings