முகப்பு /செய்தி /வணிகம் / 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இது கட்டாயம்... ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு...

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இது கட்டாயம்... ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு...

மாதிரி படம்

மாதிரி படம்

செப்டம்பர் 30க்குள் பெரும்பாலான ரூ.2,000 நோட்டுகள் கருவூலத்திற்கு வந்துவிடும் என நம்புகிறோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Maharashtra, India

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திருப்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. ரூ.2,000 நோட்டு தொடர்பான அறிவிப்புக்குப் பின் முதல்முறையாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பல முக்கிய தகவல்களை அவர் கூறினர். அதன்படி அவர் கூறியதாவது, "ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பானது நாணய புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்று. தூய்மையான நோட்டுகளை புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும். கிழிந்த, பழுதடைந்த நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.

இந்த விதியின் கீழ் தான் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கையானது ஏற்கனவே 2013-14 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது. இதற்கு வரும் செப்டம்பர் 30 வரை சுமார் 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 8% வட்டி.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. ’செல்வ மகள் திட்டம்’ குறித்து முழு விவரம் இதோ...

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. மொத்தமான ரூபாய் நோட்டு புழக்கத்தில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் வெறும் 10.8 சதவீதம் தான். எனவே, இந்த நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிகக் குறைவு. வரும் செப்டம்பர் 30க்குள் பெரும்பாலான ரூ.2,000 நோட்டுகள் கருவூலத்திற்கு வந்துவிடும் என நம்புகிறோம்.

top videos

    ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.50,000 அல்லது அதற்கு அதிகமான அளவில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த பண வரவு மற்றும் புழக்கம் நாள்தோறும் கண்காணிக்கப்படும்" என்றுள்ளர்.

    First published:

    Tags: Pan card, RBI, Reserve Bank of India, Shakthikantha Das