முகப்பு /செய்தி /வணிகம் / பான் கார்டு செயலிழக்கும்.. நெருங்கிய காலக்கெடு.. உடனே ஆதாருடன் லிங்க் பண்ணுங்க!

பான் கார்டு செயலிழக்கும்.. நெருங்கிய காலக்கெடு.. உடனே ஆதாருடன் லிங்க் பண்ணுங்க!

ஆதாருடன் பான் கார்ட் இணைப்பு

ஆதாருடன் பான் கார்ட் இணைப்பு

2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக, இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிக்கெடுவுக்கு முன்பாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்காத பொதுமக்கள் தற்போது ஆன்லைன் வாயிலாக அபராதம் கட்டிய பின் இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதையும் கூட நீங்கள் செய்யத் தவறும்பட்சத்தில், மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு உங்களுடைய பான் கார்டை நீங்கள் பயன்படுத்த இயலாது.

உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் முடக்கி வைக்கப்படும். நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அறிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது. இதுகுறித்து இந்திய வருமான வரித்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வருமான வரிச் சட்டம் 1961இன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக, அதை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். சிறப்புச் சலுகையாக விலக்கு பெற்றவர்களுக்கு மட்டும் இந்தக் கெடு பொருந்தாது.

2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும். இது கட்டாயமானது, அவசியமானது. ஆகவே, தாமதமின்றி, இன்றே செய்யவும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வளவு அபராதம் : 

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியின் காலக்கெடுவை தவற விட்ட நிலையில், அதே ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் இணைத்தவர்களிடம் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இணைத்தவர்கள் மற்றும் இனி மார்ச் 31ஆம் தேதி வரையில் ஆதார் எண் இணைக்க உள்ளவர்கள் ரூ.1000 அபாரதம் செலுத்த வேண்டும்.

Also Read : வேளாண் பட்ஜெட்... இயற்கை விவசாயத்திற்கு ரூ.26 கோடி... சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!

ஆன்லைனில் ஆதார் எண் இணைப்பது எப்படி : 

வருமான வரி இணையதளத்தில் https://www.incometax.gov.in/iec/foportal/ தளத்திற்கு செல்லவும்.லிங்க் ஆதார் என்ற மெனுவை கிளிக் செய்து, குயிக் லிங்க்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.இதையடுத்து, அடுத்த தளத்திற்கு ரீடாரக்ட் செய்யப்படுவீர்கள். இங்கு பான் எண், ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு அப்டேட் செய்யவும்.

எஸ்எம்எஸ் வழியாக இணைப்பது : 

top videos

    உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 10 இலக்க பான் எண், 12 இலக்க ஆதார் எண், இடைவெளி என்ற அளவில் இந்த மெசேஜ் இருக்க வேண்டும்.

    First published:

    Tags: Aadhaar card, Pan card