முகப்பு /செய்தி /வணிகம் / பான் கார்டு இருக்கா?... அப்போ இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10000 அபராதம்!

பான் கார்டு இருக்கா?... அப்போ இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10000 அபராதம்!

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை.

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்கிறார்கள். அப்படி நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் சில தவறுகளுக்கு 10 ஆயிரம் வரை அபராதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பான் கார்டு என்பது இன்று அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. ஆதார் அட்டையை போல, பணப்பரிவர்தனைக்கு பான் கார்டு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வருமான வரித்துறையால் இது வழங்கப்படுகிறது. இது 10 இலக்க எண்ணெழுத்துக்களை கொண்ட அட்டை. இது தனிநபர்கள், தொழில் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது வங்கிக் கணக்கைத் திறக்க, கடன் வாங்க, செலுத்த, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அல்லது முதலீடு செய்ய பான் கார்டு அவசியம்.

பான் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால், ஒருவர் தனது பெயரில் இரண்டு பான் கார்டுகளை (two pan cards one person) வைத்திருக்க முடியாது. அரசுக்கு வரி செலுத்த வேண்டியவர்கள் கண்டிப்பாக பான் கார்டு பெற வேண்டும். இல்லையெனில், கடுமையான அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிலர் தங்கள் பரிவர்த்தனைகளை அரசாங்கம் கண்காணிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பான் கார்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்த தவறை செய்தால், அதிக அபராதம் விதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது வருமான வரித்துறை விதிகளின்படி குற்றமாகும். ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற இரண்டு கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தை மீறுவதாகவும். இந்த தவறுக்கு நீங்கள் ஒரு பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

Also Read | உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்வது என குழப்பமா..? உங்களுக்கான டிப்ஸ்!

வருமான வரிச் சட்டம் (Income Tax ACT), 1961 இன் பிரிவு 272B இன் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரித்துறை விசாரணையை மேற்கொள்ளும். ஒரே நபரிடம் இரண்டு வெவ்வேறு கார்டுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அவருக்கு, ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே, உங்களிடம் எத்தனை பான் கார்டு உள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும். இரண்டு இருந்தால், பயன்படுத்தப்படாத பான் கார்டை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

top videos

    உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், நீங்கள் எந்த பான் கார்டை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதிகம் பயன்படுத்தாததை அரசிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். நீங்கள் உள்ளூர் வருமான வரி அலுவலகத்திற்குச் சென்று உங்கள் இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கலாம்.

    First published:

    Tags: Aadhaar card, Income tax, Pan card