வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வரும் 31ம் தேதிக்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியது. அதன்படி 1.4.2023 முதல், இணைக்கப்படாத PAN எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவித்க்கப்பட்டது. இந்நிலையில் பான் அட்டையுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கொடுத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இணைப்புக்கான வழிமுறைகள்
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள். இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். இணைப்பு உறுதியானது SMS மூலம் தெரிவிக்கப்படும்.
அல்லது இணையதளம் மூலமாக இணைக்க விரும்பினால்
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணைய முகவரியில் பதிவிடவும். இந்த லிங்கில் சென்று உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து விவரங்கள் சரிபார்த்தப்பின் இணைப்பு உறுதி செய்யப்படும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pan card