பிரதான் மாத்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, PMJJBY திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும், இதுவரை சுமார் ரூ. 13,290 கோடி மக்களின் வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) உள்ளிட்ட ஜன் சுரக்ஷா திட்டங்களின் (Jan Suraksha schemes) எட்டாவது ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் இந்த தகவலை வெளியிட்டார். ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் இந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களால், பாதகமான சூழ்நிலைகளில் ஏழைகள் மீதான நிதிச்சுமை ஓரளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜன்சுரக்ஷா திட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். இத்திட்டங்கள் மூலம் மக்கள் வலுவான சமூக பாதுகாப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read | ரூ.138 முதலீட்டில் ரூ.23 லட்சம் வருமானம்... எல்.ஐ.சி -யின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் (PMSBY scheme) கீழ் சுமார் 1,15,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்ல, சுமார் ரூ. 2302 கோடிக்கான கோரிக்கைகளும் தீர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் உரிமைகோரல் செயல்முறையை எளிமைப்படுத்தியதன் விளைவாக, உரிமைகோரல்களுக்கு விரைவான தீர்வும் கிடைக்கிறது என அவர் கூறினார்.
சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் 26, 2023 வரை பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் 16.2 கோடி பேர் சேர்ந்துள்ளனர். மேலும் 34.2 கோடி பேர் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் 5.2 கோடி பேர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்துள்ளனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் சேர இன்னும் யாராவது நினைத்தால், இப்போதே சேர்ந்து பயன்பெறுங்கள்.
Also Read | Gold rate today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் அருகில் உள்ள வங்கிக்குச் சென்றால் போதும். வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று வகையான திட்டங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். காப்பீடு வழங்கும் திட்டங்களில், பிரீமியத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். அடல் பென்ஷன் யோஜனா என்றால், ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை டெபாசிட் செய்து வைத்தல் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Narendra Modi, Nirmala Seetharaman