முகப்பு /செய்தி /வணிகம் / ஓய்வூதியம் பெற இனி புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு

ஓய்வூதியம் பெற இனி புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஓய்வூதியர்கள் பின்பற்ற வேண்டிய நோ்காணல் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றை வழங்க ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருவூல கணக்குத் துறையின் வழியே ஓய்வூதியதாரர்களிடம் ஆண்டு முழுவதும் நேர்காணல் நடத்தி உயிர் வாழ்வை உறுதி செய்ய வழிவகை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : மின் கட்டணம்: யாருக்கு உயர்வு? யாருக்கு இல்லை? முழு விவரம்

இந்த புதிய நடைமுறை வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணல் மூலம் வாழ்வுச் சான்றிதழ் வழங்கத் தவறினால், அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pension Plan, TN Govt