முகப்பு /செய்தி /வணிகம் / ஜியோ சினிமாவின் ஒன் இயர் பிளான் - என்ன சிறப்பம்சங்கள் ?

ஜியோ சினிமாவின் ஒன் இயர் பிளான் - என்ன சிறப்பம்சங்கள் ?

ஜியோ சினிமா

ஜியோ சினிமா

ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ சினிமாவிற்கான ஓராண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ சினிமாவிற்கான புதிய சந்தா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஓராண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா வாங்கியிருந்தது. அதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது ஜியோ சினிமா.

அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் நேரலைகளையும் ஜியோ சினிமா வழங்கி வருகிறது. தரமான ஒலியுடன் துல்லியமாமன காட்சிகளை ஒளிபரப்புவதால் ஜியோ சினிமா செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ஜியோ சினிமா செயலிக்கான புதிய சந்தா பிளான்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் ஓராண்டிற்கான பிரீமியம் பிளான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தெடர்பான விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ சினிமா ஆப்பில் ஓராண்டு திட்டமாக, அதாவது 12 மாதங்கள் அல்லது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ சினிமா பிரீமியம் சந்தா திட்டத்தின் விலை ரூ.999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு டிவைஸ் வழியாகவும் ஹாலிவுட் கன்டென்ட்டை மிக உயர்ந்த வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் பார்க்க முடியும். மேலும் ஜியோ சினிமா பிரீமியம் திட்டமானது, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கும்.

இதைவிட மலிவான திட்டங்கள் அல்லது குறைவான வேலிடிட்டியை வழங்கும் திட்டங்கள் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பாக  1 மாதம் முதல் 3 மாதம் வரையிலான வேலிடிட்டியை வழங்கும் பிளான்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

Gold rate today: நகை வாங்க இது தான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?

ஜியோ சினிமாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஜியோ சினிமா ஆப்பிற்கு சென்று, ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள புதிய சப்ஸ்க்ரைப் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது ரூ.999 மதிப்புள்ள ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை காண்பீர்கள் அதில் "Continue and pay Rs 999" என்பதை கிளிக்  செய்த பிறகு, யுபிஐ  அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஆப்சன் இருக்கும். அதன் வழியாக சந்தாவிற்கான தொகையை செலுத்தலாம். இதன் மூலம் உங்கள் ஜியோ சினிமா பிரிமியம் பிளானிற்கான சந்தாவை மிக எளிதாக செலுத்த முடியும்.

top videos

    ஜியோ சினிமா செயலியின் தரம் வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்த்துள்ளதால் ஏராளமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது புதிய சந்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ஜியோ சினிமா செயலியின் தரம் இன்னும் அதிகரிக்கும் என்றே வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்

    First published:

    Tags: Jio, Jio news