முகப்பு /செய்தி /வணிகம் / உங்கள் வருமானம் எவ்வளவு...? வருமான வரி செலுத்துவதில் நாளை முதல் புதிய மாற்றம்...!

உங்கள் வருமானம் எவ்வளவு...? வருமான வரி செலுத்துவதில் நாளை முதல் புதிய மாற்றம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

Income Tax | NEW INCOME TAX Regimeல் 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் அதற்கு எந்த வரியும் இல்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வருமான வரி செலுத்துவதில் இன்று முதல் மாற்றங்கள் வர உள்ளன. NEW INCOME TAX Regimeல் 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் அதற்கு எந்த வரியும் இல்லை. இதுவே உங்கள் சம்பளம் 7 லட்சத்து 100 ரூபாய் என்றால் புதிய வரி முறையில் 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி சலுத்த வேண்டும். அதாவது ஆண்டு சம்பளம் 7 லட்சத்திற்கு மேல் 100 ரூபாய் அதிகரித்தாலும் 25 ஆயிரம் வருமான வரி செலுத்த வேண்டும். இப்படி இருந்தால், புதிய வருமான வரியில் யாரும் வர மாட்டார்கள் என்பதால், மத்திய அரசு ஒரு மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது.

அதாவது, 7 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாறோ, அந்த தொகையை விட அவர் செலுத்தக்கூடிய வருமான வரி அதிகமாக இருக்க கூடாது. உதாரணமாக, 7 லட்சத்து 100 ரூபாய் சம்பளம் என்றால், நீங்கள் செலுத்தும் வருமான வரி 100 ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது.

பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு படி, 7 லட்சத்து 100 ரூபாய் சம்பளத்திற்கு 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் தற்போதைய அறிவிப்பின் படி, 100 ரூபாய் மட்டுமே வருமான வரி செலுத்துவார். இப்படி, 25 ஆயிரம் ரூபாய் வரை விலக்கு வழங்கப்படுகிறது.

top videos

    அதாவது 7 லட்சத்து 25 ஆயிரம் உங்கள் சம்பளம் என்றால், நீங்கள் 27500 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும், ஆனால் இந்த புதிய அறிவிப்பில், 25 ஆயிரம் வரை சலுகை இருப்பதால், 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினால் 25000 ரூபாய் மட்டும் வரி செலுத்தினால் போதும்.

    First published:

    Tags: Income tax