முகப்பு /செய்தி /வணிகம் / ஜோஷ் உடன் இணையும் பிரபல மியூசிக் தளமான டேம்ரூ

ஜோஷ் உடன் இணையும் பிரபல மியூசிக் தளமான டேம்ரூ

ஜோஷ் - டேம்ரூ

ஜோஷ் - டேம்ரூ

இதன் மூலம் இந்திய இசையை உலக அளவில் எடுத்துச் செல்ல பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல மியூசிக் தளமான டேம்ரூ(Damroo) டெய்லி ஹன்ட்டின் வீடியோ செயலியான ஜோஷ் இந்தியாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இது திறமையன கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

இசைத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை டேம்ரூ கொண்டிருக்கிறது. தனி இசைக்கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வரும் இந்தத் தளம் ஆன்மிகம், நாட்டுப்புற இசை, கிளாசிக் உள்ளிட்ட வகைகளில் இசையை வெளியிட்டுவருகிறது. தற்போது ஜோஷ் நிறுவனத்துடன் கைகோர்ததுள்ளதால் அதன் பயனாளர்கள் இன்னும் அதிகரிக்கக் கூடும். இதன் மூலம் தனி இசைக்கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஜோஷ் இந்தியா 10 லட்சத்துக்கும் அதிகமான யூசர்களைக் கொண்டிருக்கிறது. இது காமெடி, டான்ஸ், இசை, கல்வி என பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை அளித்துவருகிறது. தற்போது இதனுடன் டேம்ரூ இணைந்துள்ளதன் மூலம் பல வகையான இசைகளை ரசிகர்கள் அனுபவிக்க முடியும். இதன் மூலம் இந்திய இசையை உலக அளவில் எடுத்துச் செல்ல பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: Apps