2023 ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த 28 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழை குறுக்கிட அடுத்த நாள் ஒத்திவைக்கப்பட்டது. கடைசிப் பந்து வரை பரபரப்பு நிலவியது.
இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா வழங்கியிருந்தது. ஜியோ சினிமாவில் உலக அளவில் பல சாதனைகளை முறியடித்தது. இந்த ஐபிஎல் அதிகம் பார்த்த டிஜிட்டல் நிகழ்ச்சியாக அமைந்தது. மேலும் ஐபிஎல் இறுதிப்போட்டியை 12 கோடிக்கும் அதிகமான தனிப் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகள் 4K தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் வெளியானதும், மல்டி-கேம் காட்சிகள் AR/VR மற்றும் 360 டிகிரியில் பார்க்கும் வசதி என பார்வையாளர்களுக்கு நேரடியாக ஸ்டேடியத்திலிருந்து பார்க்கும் அனுபவமும் இந்த சாதனைக்கு காரணம்.
இதையும் படிக்க | அரசியலுக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் - சரத்குமார் !
ஜியோ சினிமா செயலியானது 2.5 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
ஜியோ சினிமாவின் இத்தகைய சேவையால் 26 ஸ்பான்சர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் இந்த நிறுவனத்துடன் இணைந்தனர். டிவியை விட 13 மடங்கு அதிகமான விளம்பரதாரர்களை ஜியோ சினிமாவில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக டிவியை விட டிஜிட்டல் வருவாய் அதிகமாக ஈர்த்துள்ளது. டிரீம் 11, ஜியோ மார்ட், போன்பே, டியோகோ ஈவி, ஜியோ, ஆப்பி ஃபிஸ், ஈடி மணி, ஒரியோ, பிங்கோ, ஸ்டிங்க், ஆஜியோ, ரூபே, லூயிஸ் பிலிப் ஜீன்ஸ், அமேசான், ரேபிடோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், புமா, கிங்ஃபிஷர் பவர் சோடோ உள்ளிட்ட 26 சிறந்த பிராண்டுகள் ஜியோவுடன் இணைந்து பணியாற்றின.
ஜியோ சினிமாவின் விலையின் நெகிழ்வுத்தன்மை, அளவீடு மற்றும் ஒருங்கிணைப்பு என ஸ்பான்சர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகளை வழங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.