ஜப்பான் நாட்டை சேர்ந்த மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனமான Mitsubishi Electric Corp, நம்முடைய தமிழகத்தில் உற்பத்தி ஆலையை அமைக்க சுமார் 231.2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,895 கோடி) முதலீடு செய்வதாக சமீபத்தில் அறிவித்து உள்ளது. தவிர இந்த திட்டத்திற்காக சுமார் 2004 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக Mitsubishi Electric India தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் புதிய ஏர் கண்டிஷ்னர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலை திட்டத்தில் ரூ.1,891 கோடியை Mitsubishi Electric நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
இதற்காக நிறுவனம் சமீபத்தில் மாநில அரசுடன் உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில் மகேந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான 52 ஏக்கர் நிலத்தில் ஏர் கண்டிஷ்னர் மற்றும் கம்ப்ரசர்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. இது இந்தியாவில் Mitsubishi Electric நிறுவனத்தின் முதல் ஏர் கண்டிஷனர் (ஏசி) மற்றும் கம்ப்ரசர் உற்பத்தி வசதியாக இருக்கும்.
வரும் அக்டோபர் 2025-ஆம் ஆண்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள ஆலையில் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா எம்.டி கசுஹிகோ தாமுரா உள்ளிட்டோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் முறைப்படி இந்த உற்பத்தி யூனிட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
இதனிடையே 100% அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் அமைக்கப்படும் உற்பத்தி ஆலையில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தனது அறிக்கையில் கூறி இருக்கும் Mitsubishi Electric India, இந்த வேலை வாய்ப்புகளில் சுமார் 60 சதவீதம் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள உற்பத்தி யூனிட்டில் வணிகரீதியான உற்பத்தி வரும் அக்டோபர் 2025-ல் தொடங்கும் என்றும், ரூம் ஏர்-கண்டிஷனர்களின் ஆரம்ப திறன் 3 லட்சம் யூனிட்களாகவும், டிசம்பர் 2025-க்குள் 6.50 லட்சம் கம்ப்ரசர்களாகவும் இருக்கும் என்று நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
அன்டர் கிரவுண்ட் ஃபில்ட்ரேஷன் ட்ரீட்மென்ட் மற்றும் சைட் கிரீனிங் மூலம் கழிவு நீரை மறுபயன்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரவிருக்கும் உற்பத்தி யூனிட் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் என நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி, கற்றல் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை வழங்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பழைய ஏசி மற்றும் Refrigeration சிஸ்டம்ஸை புதிய மாடல்களுடன் மாற்றுவதற்கான தேவை மற்றும் ஏசி-களுக்கான உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவை அதிகரித்து வருவதாக நிறுவனம் கூறுகிறது. முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் Mitsubishi Motors Corp நிறுவனம், அடுத்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் அனைத்து புதிய கார் விற்பனையிலும் ஹைப்ரிட் மற்றும் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை கணக்கில் கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvallur