முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.62000 கோடி சொத்து.. மார்பகப் புற்றுநோய்க்கு மலிவு விலை மருந்து... யார் இந்த அஸ்முக் சுட்கர்...?

ரூ.62000 கோடி சொத்து.. மார்பகப் புற்றுநோய்க்கு மலிவு விலை மருந்து... யார் இந்த அஸ்முக் சுட்கர்...?

அஸ்முக் சுட்கர்

அஸ்முக் சுட்கர்

முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ரூ. 62 ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் இவரைப் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். அவர் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil |

முகேஷ் அம்பானி அறிமுகமே தேவையில்லாத பெயர். ஏனென்றால், இவர் உலகின் குபேரர்களில் ஒருவர் மற்றும் ஒரு பழம்பெரும் தொழிலதிபர். அதே போல கௌதம் அதானியும். உலக குபேரர்களில் அவரும் ஒருவர். இவர்கள் இருவரும் இந்திய பணக்காரர்களில் முதன்மையானவர்கள். அவர்களைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால், இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் ஹஸ்முக் சத்கர் என்ற பெயரும் இருக்கிறது. அம்பானி மற்றும் அதானி அளவுக்கு அவரை பலருக்கும் தெரியாது. ஆனால், அவரது சொத்து ரூ. 62 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது.

Intas Pharmaceuticals இன் நிறுவனர் அஸ்முக் சுட்கர், 7.6 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பழமையான இந்திய பில்லியனர்களில் ஒருவர். அவர் 2019 இல் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மலிவு விலை மருந்தான எலிஃப்தாவை அறிமுகப்படுத்தினார். தற்போது, சுட்கரின் மகன்கள் நிமேஷ் மற்றும் பினிஷ் நிறுவனத்தை நிர்வகிக்கின்றனர்.

ஹஸ்முக் சத்கர் குஜராத் பல்கலைக்கழகத்தில் பார்மசியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

Also Read | ட்விட்டரில் அதிரடி மாற்றம்.. புதிய CEO லிண்டா யாக்கரினோ யார் இவர்?

அவர் தற்போது இன்டாஸ் பார்மாவின் (Intas Pharmaceuticals) செயல் தலைவராக உள்ளார். இன்டாஸ் நிறுவனம் 15 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 10 ஐரோப்பா மற்றும் மெக்சிகோவில் உள்ளன. 2022 ஆம் ஆண்டில், அபுதாபி முதலீட்டு ஆணையம் டெமாசெக்கிடம் இருந்து Intas இல் 3% பங்குகளை வாங்கியது.

2019 ஆம் ஆண்டில் எலிஃப்தா எனப்படும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மலிவு விலையில் மருந்தை அறிமுகப்படுத்துவதாக இன்டாஸ் நிறுவனம் அறிவித்தபோது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. இன்டாஸ் தயாரித்த மருந்து, ரோச் தயாரித்த ஹெர்செப்டினைப் போன்றது.

அபுதாபி முதலீட்டு ஆணையம் 2022 இல் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Temasek நிறுவனத்திடமிருந்து Intas இல் 3% பங்குகளை வாங்கியது. இன்டாஸ் நிறுவனத்திற்கு இந்தியாவும் ஐரோப்பாவும் மிகப்பெரிய சந்தைகள் என்று சொல்லலாம்.

top videos

    ஹஸ்முக் சுட்கர் மருந்துத் துறையில் மிகப் பெரிய அனுபவம் பெற்றவர். அவர் தற்போது இன்டாஸ் வெல்ஃபேர் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டது. சத்கர்கள் மிகவும் சாதாரணமாகத் தெரிகிறார்கள். ஆனால், அவர்கள் அசாதாரணமானவர்கள் என்று கூறலாம். பார்மா துறையில் நல்ல பிடிப்பு உள்ளவர்கள் என்றே சொல்லலாம்.

    First published:

    Tags: India