முகப்பு /செய்தி /வணிகம் / 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா...? வங்கி டெபாசிட் கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்...

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா...? வங்கி டெபாசிட் கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்...

2000 நோட்டுகள்

2000 நோட்டுகள்

எஸ்பிஐ வங்கி உட்பட பல முதன்மையான வங்கிகள் டெபாசிட் செய்வதற்குக் கட்டணம் வசூலித்துவருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறுவதாக அறிவித்தது. அதே நேரம் ​​வாடிக்கையாளர்களின் வசதிக்காக நோட்டுகளை மாற்ற மே 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரை அவகாசம் அளித்துள்ளது. ​​வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை ஒரு நாளில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் உங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட்டும் செய்துகொள்ளலாம். இந்த நிலையில், முதன்மையான வங்கிகள் கணக்கில் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமுறை பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் இருந்துவருகிறது.

மே 23-ம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை முக்கிய வங்கிகளில் டெபாசிட் செய்வோருக்கும் இந்தக் கட்டணம் விதிப்பு நடைமுறை செயல்பாட்டில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளை எத்தனை முறை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கவில்லை. ஆனால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளன. பல வங்கிகள் நோட்டுக்கள் மாற்றுவதற்கு  சேவைக் கட்டணம் வசூலிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி எஸ்பிஐ உட்பட மற்ற பெரிய வங்கிகள் டெபாசிட் செய்ய எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐயில்(ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) ஒரு மாதத்தில் 3 முறை மட்டுமே இலவசமாக பணத்தை டெபாசிட் செய்யமுடியும். இதன்பிறகு ஒவ்வொரு முறை வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு 50 ரூபாய் மற்றும்  ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை வரவு வைப்பதற்கும் இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படும். இயந்திரம் மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் இல்லை. டெபிட் கார்டு மூலம் டெபாசிட் செய்ய ரூ.22 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

தனியார் துறையின் மிகப்பெரிய வங்கியான HDFC வங்கியில் ஒவ்வொரு மாதமும் 4 முறை இலவசமாக பணப் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும். நான்கு முறைக்கு கூடுதலாக வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிமாற்றம் செய்யும்போது 150 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் நேரடியாக செய்யும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு மாதத்தில் 4 முறை இலவச பரிவர்த்தனை செய்ய முடியும்.  அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

Also Read : 2000 ரூபாய் நோட்டுக்களை முறையாக மாற்றுவது எப்படி?

மற்றொரு தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 இலவச பரிவர்த்தனைகளை வழங்கிவருகிறது. இதில் வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய இரண்டும் அடங்கும். இந்த வரம்பை கடந்த பிறகு, ரூ.150 வரி விதிக்கப்படும். வங்கிக் கிளையில் பணத்தை டெபாசிட் செய்தாலும் அல்லது இயந்திரம் மூலம் டெபாசிட் செய்தாலும் இந்தக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Bank, HDFC Bank, RBI, SBI Bank