முகப்பு /செய்தி /வணிகம் / மத்திய அரசின் மகளிருக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம் : வெளியான முக்கிய அப்டேட்

மத்திய அரசின் மகளிருக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம் : வெளியான முக்கிய அப்டேட்

மாதிரி படம்

மாதிரி படம்

மகளிர் அல்லது பெண் குழந்தைகள் பெயரில் 2 வருட (2025  மார்ச் 31 , வரை)காலங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். பகுதி அளவு தொகை திரும்பப் பெறக்கூடிய வசதியுடன் 7.5 சதவிகித நிலையான வட்டி அளிக்கப்படும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களில் மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் மகளிர் அல்லது பெண் குழந்தைகள் பெயரில் 2 வருட (2025  மார்ச் 31 , வரை) காலங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். பகுதி அளவு தொகை திரும்பப் பெறக்கூடிய வசதியுடன் 7.5 சதவிகித நிலையான வட்டி அளிக்கப்படும்.

அதே போன்று, தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) திட்டம், 2019 என்ற திட்டம் திருத்தம் செய்யப்பட்டு தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) (திருத்தம்) திட்டம், 2023 என்ற பெயரில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், 2023 ஏப்ரல் 1 முதல், தனிநபர் கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு 4.50 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக் கணக்கிற்கு (Joint account) ஒன்பது லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 2019, திருத்தம்  செய்யப்பட்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு (திருத்தம்) திட்டம், 2023 என்ற பெயரில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து, ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்க: TNPSC GROUP 4 FAQ: குரூப் 4 தேர்வர்களே... உங்கள் குழப்பங்களுக்கான விரிவான பதில்கள் இங்கே..!

top videos

    சேமிப்பு வைப்பு மற்றும் பிபிஎப் தவிர அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களும் ஏப்ரல் 1, 2023 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதுடன், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் இந்தத் திட்டங்களில் அதிக முதலீட்டை ஈர்க்கும். கிராமப்புறங்களில் பெண்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், மூத்த குடிமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளில். சிறுசேமிப்புத் திட்டங்களில் அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    First published:

    Tags: Post Office, Savings