முகப்பு /செய்தி /வணிகம் / மதுரையில் வருகிறது மெட்ரோ... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்...!

மதுரையில் வருகிறது மெட்ரோ... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்...!

மதுரை - பழனிவேல் தியாகராஜன்

மதுரை - பழனிவேல் தியாகராஜன்

TN Budget 2023 | சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

அதில்,  “மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை நகரின் மையப்பகுதிகளில் நிலத்திற்கு அடியில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும். திருமங்கலத்தையும் ஒத்தக்கடையும் இது இணைக்கும். மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிதி நிறுவனங்களில் நிதி உதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - உடனுக்குடன் தகவல்கள்

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Minister Palanivel Thiagarajan, TN Budget 2023