இன்றைக்கு நாம் தேவையில்லை என நினைத்து வீசி எறியும் பொருள்களுக்கு கலை வடிவம் கொடுக்கும் கலைஞர்கள் ஏராளமாக உருவெடுத்துவருகின்றனர். இவர்களில் ஒருவராக வலம் வருகிறார் கர்நாடகவைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி வர்ஷா.
வாழ்க்கையை வளமாக்கிய வாழைநார் பொருள்கள்:
கர்நாடகாவின் குண்ட்லுபேட் தாலுகாவில் உள்ள அலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதாகும் வர்ஷா. எம்.டெக் பட்டதாரியான இவருக்கு மற்றவர்களிடம் கீழ்ப்படிந்து வேலை செய்வதில் விருப்பமில்லாமல் இருந்துள்ளது. மேலும் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என நினைத்துவந்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக வர்ஷா தன்னுடைய விவசாய நிலத்தில் வாழை மரங்களை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார் .
திருப்புமுனையாக அமைந்த யூடியூப் வீடியோ
வர்ஷாவின் விவசாய நிலத்தில், வாழை மரங்கள் செழிப்பாக வளர்ந்து அமோக விளைச்சலை கொடுத்திருக்கிறது. வாழைத்தார்களை அறுவடை செய்த பின், வாழைத்தண்டுகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது மிகவும் சவாலான பணியாக இருந்துள்ளது. பின்னர் அதனை எப்படி அப்புறப்படுத்துவது என யூடியூப்பில் தேடியுள்ளார்.
அப்போது தான் தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், தேவையில்லை எனத் தூக்கி எறியும் வாழைத்தண்டுகளை வைத்து பல பயனுள்ள பொருள்களை தயார் செய்து வந்ததைப் பார்த்து வியப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாமும் ஏன் இப்படி செய்யக்கூடாது? என அதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.
இதையும் படிக்க | அசல் சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டதா?... உடனே செய்யவேண்டிய 3 விஷயங்கள்!
வாழைத்தண்டுகளை வைத்து, கைவினைப்பொருட்கள் செய்யத் தேவையான உபகரணங்களையும், இயந்திரங்களையும் வாங்கியுள்ளார். இவற்றின் உதவியோடு தரை விரிப்புகள், பைகள், பர்ஸ்கள் மற்றும் பிற கைவினைப் பொருட்கள் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இதை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஷாப்பிங் அப்ளிகேஷன்கள் மூலமாகவும் தயாரிப்புகளை விற்க தொடங்கிய அவர், தற்போது இளம் தொழிலதிபராக வலம் வருகிறார். இந்த பொருட்களை செய்வதற்குத் தேவையான வாழைத்தண்டுகளை அருகிலுள்ள விவசாயிகளிடம் பெற்றுவருகிறார். இதனால் தேவையில்லை என வீசி எறியும் பொருள்களுக்கும் மவுசு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
வர்ஷா தான் மட்டுமில்லாமல் அங்குள்ள பல பெண்களை வாழை நாரில் பொருள்களை செய்யும் தொழில் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமில்லாது வாழையில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் மீதமுள்ள கழிவுப் பொருள்களை வைத்து இயற்கை உரமும் செய்யத்தொடங்கியுள்ளார். இதுவும் சந்தையில் அமோக விற்பனையாகிவருகிறது.
வர்ஷா நினைத்ததுப்போல சொந்தமாக தொழில் தொடங்கி, இவர் மட்டுமில்லாது பல பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதால் பல பெண்களுக்கு முன் உதாரணமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Business