தற்போது, இந்தியாவில் பல வங்கிகள் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. இருப்பினும், அதிக கடன் வட்டி விகிதங்கள் காரணமாக, பலருக்கும் லோன் வாங்குவது கடினமாக உள்ளது. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, இந்தியாவில் குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அறிய விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கு தான்.
பிப்ரவரி 8ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சில ஹோம் லோன் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் 8.75 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன.
வீட்டு கடன் மீது குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகளை கீழே குறிப்பிடுகிறோம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.5
சென்ட்ரல் வங்கி - 8.55
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 8.6
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 8.6
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 8.6
கோடக் மஹிந்திரா வங்கி - 8.65
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் - 8.6
ஆக்ஸிஸ் வங்கி - 8.75
வீட்டுக் கடன் வட்டியைக் குறைப்பது எப்படி?
பணத்தைச் சேமிப்பதற்காக வீட்டுக் கடனில் குறைந்த வட்டியையே அனைவரும் செலுத்த விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், கவலைப்பட வேண்டாம். காரணம், உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்க பயன்படுத்தக்கூடிய சில பொதுவான வழிகளை இங்கே சொல்கிறோம்.
நல்ல கிரெடிட் ஸ்கோர்
கடன் வாங்கிய பணத்தை நீங்கள் கையாளும் போது எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறும் விஷயங்களில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஒன்றாகும். 750-க்கு மேல் ஸ்கோர் இருந்தால் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வங்கியிலிருந்தும் வீட்டுக் கடனைப் பெற உங்களை அனுமதிக்கும். ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது சவாலானது, ஆனால் நீங்கள் இதை செய்து தான் ஆக வேண்டும்.
கணிசமான முன்பணம்
வீட்டுக் கடனுடன் சில திட்டமிட்ட அணுகுமுறையுடன் வீடு வாங்குவது உதவிகரமாக இருக்கும். கடனைப் பெறும்போது பெரிய முன்பணம் செலுத்துவதற்கான வேலைகளில் இறங்கலாம். இதனால் மொத்தக் கடன் கணக்கைக் குறைக்கலாம், இது வட்டியை கணிசமாகக் குறைக்கும்.
கடன் காலத்தை குறைக்கவும்
அதிக வீட்டுக் கடன் வட்டி விகிதம் காரணமான முதன்மைக் காரணிகளில் இதுவும் ஒன்று என்பதால், குறுகிய காலக் கடன்களைப் பெற முயற்சிக்கவும். தவணை காலத்தைக் குறைப்பதன் மூலம் உங்கள் EMI அதிகமாக இருக்கும். அதே வேளையில், உங்களின் குறைந்த வட்டி விகிதம் இறுதியில் உங்களுக்குப் பலனளிக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Loan