முகப்பு /செய்தி /வணிகம் / அசல் சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டதா?... உடனே செய்யவேண்டிய 3 விஷயங்கள்!

அசல் சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டதா?... உடனே செய்யவேண்டிய 3 விஷயங்கள்!

ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால் என்ன செய்யணும்?

ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால் என்ன செய்யணும்?

How to Get Duplicate Property Documents | நாம் வைத்திருந்த அசல் சொத்து ஆவணங்களை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது அவற்றை எங்காவது மறந்து வைத்துவிட்டாலோ, வேறு யாராவது இதைத் தவறாகப் பயன்படுத்தி உங்கள் சொத்தை உடைமையாக்க முயற்சிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

What to do If Your Property Documents Were Lost | சொத்து பேப்பர் (property paper) என்பது சொத்து ஆவணங்கள் ஆகும். தங்களின் சொத்துக்களை பாதுகாக்க, இவற்றை கவனமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், தவறுதலாக சொத்து ஆவணங்கள் எங்காவது தொலைந்து போய்விட்டால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நம்மில் பலர் பதட்டப்படுவோம். என்ன செய்து என்றே தெரியாம திணறி நிற்போம். ஏனென்றால், எதிர்க்காலத்தில் உங்கள் சொத்தை விற்க அசல் சொத்து ஆவணங்கள் மிகவும் முக்கியம். இந்த சொத்தின் உண்மையான உரிமையாளர் நீங்கள் என்பதையும், அதன் மீது உங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதை ஆவணங்கள் மட்டுமே காட்டும்.

அந்தவகையில், அசல் சொத்து ஆவணங்களை இழப்பது என்பது அந்த நபருக்கு சொத்தை உரிமை கோருவதற்கு எந்த தீர்வும் இல்லை என்பதாகும். நிச்சயமாக உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஒருவரின் பெயரிலோ சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்படும், ஆனால் திடீர் தேவை ஏற்பட்டால் உடனடியாகப் பெற முடியாது.

அதனால்தான், காகிதம் தொலைந்து போனால், நகல் ஆவணங்களை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவது நல்லது. காகிதம் தொலைந்து போவதைத் தவிர, திருடப்பட்டாலும் அல்லது எரிக்கப்பட்டாலும் கூட நகல் காகிதங்களை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தையாக சூழ்நிலையில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

முதலில் எப்ஐஆர் பதிவு செய்யுங்கள் : முதலாவதாக, உங்களின் அசல் சொத்து ஆவணங்கள் தொலைந்ததாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் நீங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உள்ளூர் போலீசார் மறுத்தால், ஆன்லைன் மூலம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும். அதன்பிறகு ஆவணங்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிப்பார்கள். இந்த முயற்சியில் தோல்வியுற்றால், காவல்துறையினர் உங்களுக்கு ஆவணம் கண்டறிய முடியவில்லை என்பதற்கான சான்றிதழை வழங்குவார்கள்.

Also Read | அதிக வட்டி.. அதிக பணம்.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வங்கி!

விளம்பரம் : போலீஸ் மூலம் சொத்து ஆவணங்களை தேடிய பிறகு, உங்கள் ஆவணம் கிடைக்கவில்லை என்றால், உங்கள் அடுத்த கட்டம் செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பதாக இருக்கும். இந்த விளம்பரத்தில், சொத்து இழப்பு குறித்து அதன் முழு விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதற்குப் பிறகு, சில நாட்கள் காத்திருக்கவும். பொதுவாக, 15 நாட்கள் காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. யாரேனும் வைத்திருந்தால், இந்த விளம்பரத்தைப் பார்த்து உங்களிடம் திருப்பித்தரலாம்.

கடைசி ஸ்டெப் : இப்போதும் உங்கள் ஆவணம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நகல் ஆவணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். சொத்து முதலில் பதிவு செய்யப்பட்ட அதே துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இந்த விண்ணப்பம் வழங்கப்படும். இந்த விண்ணப்பத்துடன், எஃப்.ஐ.ஆர் மற்றும் கண்டறிய முடியாத சான்றிதழின் நகல் மற்றும் செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் நகலை இணைக்க வேண்டும். இங்கே விண்ணப்பம் உங்களிடமிருந்து சிறிது கட்டணம் பெற்று ஏற்றுக்கொள்ளப்படும். 15-20 நாட்களுக்குப் பிறகு, சொத்தின் நகல் ஆவணங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

First published:

Tags: Property, Tamil News