நம் குழந்தைகளில் எதிர்காலத்திற்கு தற்போது இருந்தே சேமிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. குழந்தைகளின் கல்வி, தொழில் போன்றவற்றிற்குச் சிறுவயது முதல் சேமிக்கும் திட்டங்கள் பல உள்ளன. அதில் பாதுகாப்பான, அதிக நன்மைகளைத் தரும் திட்டமாக இருப்பது எல்ஐசி வழங்கும் ஜீவன் தருண் பாலிசி.
இத்திட்டத்தின் மூலம் குழந்தை பிறந்த 90 நாட்களில் இருந்தே சேமிக்கத் தொடங்கலாம். அதே போல், 12 வயது வரை உள்ள குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 25 வயதாகவுள்ளது. ஆனால், இதற்கு நீங்கள் 20 வயது வரை தான் பீரிமியம் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு, 12 வயதில் பாலிசி தொடங்கினால், 25 வயதில் திட்டம் முடிவடைந்து நீங்கள் செலுத்தியப்பணத்தை மொத்த தொகையான பெற்றுக்கொள்ளலாம். 20 முதல் 24 வயது வரை உள்ள காலத்தில் நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து பொருளாதார தேவை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு 5, 10 அல்லது 15 சதவீத தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல், கடன் பெறும் வசதியும் உண்டு.
பீரிமியம் தொகை பொருத்தவரை, மாதம் ரூ.5,000 / காலாண்டுக்கு ரூ.15,000 / அரை வருடம் ரூ.25,000 / வருடம் ரூ.50,000 என்று செலுத்தலாம். பாலிசி முதிர்ச்சியடையும் போது போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை ஆகியவை சேர்த்து உங்களின் சேமிப்பு தொகை உயர்ந்து அதிக நன்மைகளுடன் திரும்பிப் பெறுவீர்கள்.
Also Read : Gold rate today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா?
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறப்பான சேமிப்பு திட்டமாக எல்ஐசி-யின் ஜீவன் தருண் பாலிசி விளங்குகிறது. மேலும் இதில் வருமான வரி பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் உண்டு. இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு https://licindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.