நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) அனைத்து தரப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாலிசிகளை விட அதிக பாதுகாப்பை நமக்கு வழங்கும் என்பதால் பல தரப்பட்ட மக்களின் தேர்வாக உள்ளது எல்.ஐ.சி சேமிப்புத்திட்டம். இந்த வரிசையில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு பாலிசி திட்டமாக உள்ளது தான் எல்.ஐ.சி ஜீவன் லாப் (LIC Jeevan labh.)
எல்.ஐ.சியின் ஜீவன் லாப் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சமாக 59 ஆண்டுகள். பொதுவாக இந்த ஜீவன் லாப் பாலிசியில் 3 பிளான்கள் உள்ளது. 16 ஆண்டுகள் நீங்கள் பாலிசி எடுத்தால் நீங்கள் 10 ஆண்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும். இரண்டாவது 21 ஆண்டு பாலிசியாகும். இந்த பாலிசியில் நீங்கள் 15 ஆண்டுகள் மட்டும் பிரீமியத் தொகை செலுத்தினால் போதும். 3 ஆவதாக 25 ஆண்டு பாலிசி காலம் கொண்ட திட்டத்தின் கீழ், 16 ஆண்டுகள் நீங்கள் பிரிமீயம் தொகை செலுத்தினால் போதும்.
Read More : வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ், 25 வயதாக இருக்கும் போது, பதிவு செய்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.252 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால், ( அதாவது மாதத்திற்கு ரூ.7,572) நல்ல லாபம் பெறக்கூடும். அதாவது நீங்கள் உங்களுடைய முதிர்வு காலத்தில் ரூபாய் 54 லட்சம் வரை பெற முடியும்.
எல்.ஐ.சி ஜீவன் லாப் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.