தற்போது பொருளாதார தேவைகள் மிக அதிகமாகிவிட்டன. எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அவசரநிலைகளை சந்திக்க சரியான நிதி திட்டமிடல் அவசியம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) வழங்கும் பல திட்டங்கள் இதற்கு சரியான தேர்வாக இருக்கும். இதில் பணத்தை சேமிப்பதோடு அதை பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும். எல்ஐசி பீமா ரத்னா திட்டமும் அப்படித்தான். கார்ப்பரேட் முகவர்கள், தரகர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (IMF), LIC பொது சேவை மையங்கள் (CSC) மூலம் இதில் இணையலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
இந்தத் திட்டத்தில், பிரீமியம் தொகையை காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தலாம். பாலிசிதாரர்கள் தங்களின் பிரீமியங்களில் வருடாந்திர காலத்தில் 2% வரையிலும், அரையாண்டுக் கட்டணங்களில் 1% வரையிலும் தள்ளுபடியைப் பெறலாம். அடிப்படைக் காப்பீட்டுத் தொகை அதிகமாக இருந்தால், பாலிசிதாரர்கள் தங்கள் டேபுலர் பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறலாம். எல்ஐசி பீமா ரத்னா திட்டத்தில் பிரீமியம் செலுத்துவது நிறுத்தப்பட்டு, பாலிசி காலாவதியானால், முதல் பிரீமியம் செலுத்துதலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அதை புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது. பிரீமியங்களை இரண்டு வருடங்களுக்கும் குறைவாக செலுத்தினால், சலுகைக் காலத்திற்குப் பிறகு பாலிசி முடிவடையும். ஆனால் குறைந்தபட்சம் இரண்டு வருட பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசி முழுமையாக நிறுத்தப்படாமல், பாலிசி காலம் முடியும் வரை தொடரும் பாலிசியாகக் கருதப்படும்.
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு பிரீமியங்கள் செலுத்தப்பட்டால், பாலிசியை சரண்டர் செய்ய விருப்பம் உள்ளது. இது சிறப்பு சரண்டர் அல்லது உத்தரவாத சரண்டர் மதிப்பை விட அதிகமாகும். லைவ் பாலிசியில் சரண்டர் மதிப்பு 90% வரையிலும், செலுத்தப்பட்ட பாலிசியில் சரண்டர் மதிப்பு 80% வரையிலும் கடன் பெறலாம்.
பலன்கள்
பாலிசி லைவில் இருக்கும்போது பாலிசிதாரர் இறந்தால், பாலிசிதாரரின் குடும்பம் அந்தப் பணத்தைப் பெறும். உறுதி செய்யப்பட்ட மரண பலன் மற்றும் கூடுதல் தொகை ஆகியவற்றை சேர்த்து குடும்பத்திற்கு ஒன்றாக வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படும் பிரீமியத்தின் ஏழு மடங்கு அல்லது அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 125%, இதில் எது அதிகமோ அது வழங்கப்படுகிறது. எல்ஐசி பீமா ரத்னா திட்டமானது உயிர்வாழும் போதும் பல நன்மைகளை வழங்குகிறது. பாலிசிதாரர் பாலிசி காலம் முடியும் வரை உயிரோடு இருந்தால், அவர் அடிப்படை காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். கூடுதலாக, முதிர்ச்சியின் போது உறுதியளிக்கப்பட்ட தொகையும் வழங்கப்படும்.
பீமா ரத்னா திட்டத்திற்கான தகுதி
பீமா ரத்னா திட்டத்திற்கு தகுதிபெற, பாலிசிதாரர் குறைந்தபட்சம் அடிப்படைத் தொகையாக ரூ.5 லட்சத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடிப்படை உத்தரவாதத் தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. பாலிசி காலம் 15, 20 அல்லது 25 வருடங்களாக இருக்கலாம். பிரீமியம் செலுத்தும் காலம் 15 வருட பாலிசிகளுக்கு 11 ஆண்டுகள், 20 வருட பாலிசிகளுக்கு 16 ஆண்டுகள் மற்றும் 25 வருட பாலிசிகளுக்கு முழு பாலிசி காலம்.
உதாரணமாக, ஒரு நபர் பீமா ரத்னா திட்டத்தில் ரூ.10 லட்சம் அடிப்படைத் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் (ஒரு நாளைக்கு ரூ.136) வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.23,05,000 இறப்பு பலன் கிடைக்கும். இதில் ரூ.10 லட்சம் அடிப்படைக் காப்பீட்டுத் தொகை, ரூ.12.5 லட்சம் (அடிப்படைத் தொகையில் 125%), ரூ.55,000 உத்தரவாத தொகை ஆகியவை அடங்கும். பாலிசிதாரர் பாலிசி காலம் வரை இருந்தால், முதிர்வு நன்மை ரூ.5,55,000. இதில் ரூ.5 லட்சம் (அடிப்படைத் தொகையின் 50%), ரூ.55,000 உத்தரவாதச் சேர்த்தல்கள் அடங்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.