லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) என்பது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். பல நடுத்தர குடும்பங்கள் எல்ஐசியின் பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. வசதியானவர்களைக் காட்டிலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மிக பெரிய காப்பாளனாக எல்ஐசி நிறுவனம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்ஐசியில் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. மிகக் குறைந்த முதலீட்டுத் தொகை முதல் அதிகப்படியான முதலீடு வரை பல வகையான திட்டங்கள் உள்ளன. அதே போன்று, எல்ஐசி நிறுவனம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது.
எல்ஐசி நிறுவனத்தில் பல திட்டங்கள் இருந்தாலும், இதன் பீமா ரத்னா திட்டம் (Bima Ratna Policy) பலரையும் கவர்ந்துள்ளது. இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது, சேமிக்க விரும்பும் தனிநபர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாம். இதற்கு காரணம், இதன் உத்தரவாதமான போனஸ் அம்சம் தான்.
இந்த திட்டத்தில் ஒருவர் தினசரி ரூ.166 செலுத்தி வந்தால், இதன் முதிர்வு காலத்தில் ரூ.50 லட்சம் வரை பணம் பெறலாம் என்று கூறுகின்றனர். இதற்கான பிரீமியம் கட்டணத்தை முதலீட்டாளரின் வசதிக்கு ஏற்ப மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் என்கிற முறையில் செலுத்தலாம்.
Also Read | இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 40% கேஷ்பேக்... விவரம் இதோ!
இந்த திட்டத்திற்கு தகுதியுடைய வயது குறித்து பேசினால், குழந்தை பிறந்த 90 நாள் முதல் 55 வயது வரை இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தின் பாலிசி 15, 20 மற்றும் 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பிரீமியம் செலுத்தும் காலம் இதற்கு ஏற்றவாறு மாறுகிறது. உதாரணமாக, 15 ஆண்டு திட்டத்தை தேர்வு செய்பவர்கள், வெறும் 11 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்தினால் போதும். அதே போல, 20 ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்பவர்கள், 16 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதும். 25 ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்பவர்கள், 21 ஆண்டுகளுக்கு பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு அதிக அளவிலான லாபம் கிடைக்கும். அதாவது, 15 ஆண்டுகால திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சம் பெறலாம். பாலிசி முடிவில் இதர பல சலுகைகளுடன் சேர்த்து மொத்தம் ரூ. 9 லட்சம் வரை லாபம் பெறலாம்.
இல்லையெனில், முதலீட்டாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 5,000 செலுத்தி வந்தால், பெரிய தொகையை பெற உதவியாக இருக்கும். இதற்கு, தினசரி சேமிப்பில் வெறும் ரூ. 166 செலுத்தி வந்தால் போதும், பெரிய தொகையை பெறலாம்.
எல்ஐசி பீமா ரத்னா பாலிசியானது, கணிசமான மற்றும் உத்தரவாதமான போனஸ்களையும், வருவாயையும் கொண்ட அனைவரையும் கவரும் முதலீட்டு திட்டம் ஆகும். அதே போன்று, பிரீமியம் செலுத்தும் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு முதிர்ச்சியின் போது அவர்கள் பெறும் போனஸைக் கணக்கிடுவதற்கான வசதியையும் இது வழங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.