முகப்பு /செய்தி /வணிகம் / சைக்கிள் சலுகை.. ரூ.6000 வரை தள்ளுபடி.. ரூ.500 EMI ஆப்ஷனில் செம ஆஃபர் தரும் ஃபிளிப்கார்ட்!

சைக்கிள் சலுகை.. ரூ.6000 வரை தள்ளுபடி.. ரூ.500 EMI ஆப்ஷனில் செம ஆஃபர் தரும் ஃபிளிப்கார்ட்!

லீடர் டார்பின் சைக்கிள்

லீடர் டார்பின் சைக்கிள்

இந்த சைக்கிளின் MRP விலை ரூ. 12,522. ஆனால் இப்போது நீங்கள் அதை ரூ. 6499-க்கு வாங்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய சைக்கிள் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியெனில் நீங்கள் ஒரு பெரிய தள்ளுபடியை பெற முடியும். ஆம்! நீங்கள் விரும்பும் சைக்கிளை பாதி விலையில் பெற முடியும். ப்ளிப்கார்ட் தளத்தில் தான் நீங்கள் மலிவு விலையில் சைக்கிள் வாங்க முடியும். எந்த மாதிரியான சலுகை எந்த சைக்கிளுக்கு உள்ளது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

லீடர் டார்ஃபின் 26டி எம்டிபி சைக்கிள் வித்அவுட் கியர் மாடலில் பெரும் தள்ளுபடி உள்ளது. இந்த சைக்கிளின் MRP விலை ரூ. 12,522. ஆனால் இப்போது நீங்கள் அதை ரூ. 6499-க்கு வாங்கலாம். அதாவது 48 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த சைக்கிளை வாங்கினால், உங்களுக்கு ரூ. 325 தள்ளுபடி வரும். அதாவது நீங்கள் சுமார் ரூ. 6,174-க்கு இந்த சைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

இந்த சைக்கிள் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றது. சிங்கிள் ஸ்பீட், முன்பக்க டிஸ்க் பிரேக், ரியர் டிஸ்க் பிரேக், ஸ்டீல் சைக்கிள், முன்பக்க சஸ்பென்ஷன், 26 இன்ச் டயர்கள், 18 இன்ச் பிரேம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் நீங்கள் குறைந்த EMI-யிலும் இந்த சைக்கிளை வாங்கலாம். மாதாந்திர EMI ரூ. 542ல் தொடங்குகிறது.

நீங்கள் ஒரு வருடத்திற்கு நோ காஸ்ட் இஎம்ஐ பெறலாம். மாதம் ரூ 542 போதுமானது. 9 மாதங்கள் என்றால், மாதம் ரூ. 723 கட்ட வேண்டும். ஆறு மாத தவணையில் ரூ. 1084 ஆகும். மேலும் 3 மாத தவணைக்கு ரூ. 2167 செலுத்த வேண்டும். இதுவே தவணை 24 மாதங்கள் வரை இருந்தால், ரூ. 313. 18 மாதங்களுக்கு, மாதத்திற்கு 400 கட்ட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து மாதாந்திர இஎம்ஐயும் மாறுபடும். நோ காஸ்ட் இஎம்ஐ வங்கி அடிப்படையில் மாற்ற முடியாது. மேலும் EMI தொகையிலும் மாற்றம் இருக்கலாம். எனவே, இந்த விஷயங்களையும் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published: