ஐபிஎல் 2023 சீசனின் துவக்கத்தில் புதிய கிரிக்கெட் பிளான்களை நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ அறிவித்தது. இந்த பிளான்கள் யூஸர்களுக்கு 3GB தினமும் டேட்டா பேக்ஸ்களை அன்லிமிடேட் காலிங் மற்றும் 5ஜி நன்மைகளுடன் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
அதே நேரம் ஜியோ சினிமாவில் கிரிக்கெட் போட்டிகளின் லைவ் ஸ்ட்ரீம்களை தொடர்ந்து பார்க்க யூஸர்களுக்காக ஜியோ நிறுவனம், 40GB வரை கூடுதல் இலவச டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மூலம் யூஸர்கள் கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல பிடித்த சீரிஸ் அல்லது திரைப்படங்களையும் பார்த்து மகிழலாம்.
ஜியோ கிரிக்கெட் பிளானானது நாளொன்றுக்கு 3GB டேட்டா மற்றும் தடையற்ற ஸ்ட்ரீமிங் அனுபவத்தை உறுதிசெய்ய கூடுதல் இலவச டேட்டா வவுச்சர்கள் என அதிக டேட்டா சலுகையுடன் நிரம்பியுள்ளது. ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.999 விலையில் வரும் இந்த பிளான்கள் 40GB வரை இலவச டேட்டாவை வழங்குவதோடு, கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் பிற நன்மைகளையும் உள்ளடக்கி உள்ளது. 40GB வரை இலவச டேட்டாவுடன் கூடுதல் டேட்டா ஆட்-ஆன் பெனிஃபிட்ஸ்களுடன் கிடைக்கும் ஜியோ பிளான்களின் விவரங்கள் கீழ் வருமாறு :-
ஜியோ 3GB டெய்லி டேட்டா பிளான்களின் விவரங்கள்:
ஜியோ ரூ 219 பிளான்:
இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் 14 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா உள்ளிட்டவை அடங்கும். இந்த பிளானுடன் யூஸர்கள் ரூ.25 பாய் இலவச 2GB டேட்டா ஆட்-ஆன் வவுச்சரையும் பெறலாம். ஜியோ வெல்கம் 5ஜி சலுகையைப் பெற்றவர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 5ஜி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ.399 பிளான்:
இந்த பிளானின் கீழ் யூஸர்கள் அன்லிமிட்டட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாவை பெறலாம். சிறப்புச் சலுகையாக, ரூ.61 மதிப்புள்ள 6GB டேட்டா ஆட்-ஆன் வவுச்சர் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஜியோ ரூ.999 திட்டம்:
ஜியோவின் இந்த பிளான் அன்லிமிட்டட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 5G யூஸர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.241 மதிப்பிலான கூடுதல் 40GB இலவச டேட்டா பலனையும் அனுபவிக்க முடியும்.
Also Read : Gold rate today: நகை வாங்க இது தான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?
ஸ்பெஷல் ப்ரீபெய்ட் மொபைல் பேஸ் பிளான்ஸ்களுடன், கிரிக்கெட் டேட்டா ஆட்-ஆன் பிளான்ஸ்களையும் ஜியோ வழங்குகிறது. ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பிளான் யூஸர்களுக்கு 50GB டேட்டாவை வழங்குகிறது, இது அவர்களின் ஆக்டிவ் பிளான் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும். ரூ.444 பிளான் 60 நாட்களுக்கு கூடுதலாக 100GB டேட்டாவை வழங்குகிறது, அதே போல ரூ.667 பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டுடன் 150GB டேட்டாவை வழங்குகிறது.
இதற்கிடையே ஜியோவின் போட்டியாளரான ஏர்டெல் நிறுவனமும் கூடுதல் OTT நன்மைகளுடன் 3GB டேட்டா பிளான்களை வழங்குகிறது. இதற்கு ஏதுவாக யூஸர்களுக்கு ஏர்டெல் பிளான்களை வழங்குகிறது. ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.699 விலையில் கிடைக்கும் இந்த 3 பிளான்ஸ்களும் அன்லிமிட்டட் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் OTT பலன்களை உள்ளடக்கியது. தகுதியான யூஸர்கள் அன்லிமிட்டட 5G டேட்டா பலனை பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio, Jio 5G, Recharge Plan