நீங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துபவரா?... ஆம் என்றால் உங்களுக்கான செய்தி இது. நம்மில் பலர் ஷாப்பிங் செய்யும் போது இரண்டு ரூபாய் கேஷ் பேக் கிடைத்தாலே சந்தோசப்படுவோம். அதுவே உங்களுக்கு 40 சதவீதம் வரை கேஷ் பேக் கிடைத்தால் எப்படி இருக்கும்?. கனவுலதான் இதுலாம் நடக்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறீர்களா?. ஆனால், இந்த சலுகை உண்மையாகவே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
ரூபே மற்றும் ஜேசிபி இன்டர்நேஷனல் சமீபத்தில் இந்த சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, கேஷ்பேக் ஒப்பந்தங்களின் மூன்றாவது தவணையை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வகையான RuPay JCB டெபிட் கார்டுகள் (RuPay JCB Debit Cards) மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ரூபே ஜேசிபி கார்டு மூலம் UAE, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஸ்பெயினில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் பரிவர்த்தனை செய்தால் 40 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என்று NPCI தெரிவித்துள்ளது.
ரூபே ஜேசிபி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் 40 %கேஷ்பேக் பெறலாம் என NPCI தெரிவித்துள்ளது. UAE, தாய்லாந்து, மலேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் செலவு செய்வதற்கு இது பொருந்தும். இந்த 40 சதவீத கேஷ்பேக் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இது மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ரூ. 3 ஆயிரம் வரை மட்டுமே கேஷ்பேக் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு கார்டில் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம். ஜேசிபி இன்டர்நேஷனல் என்பது ஜப்பானின் ஜேசிபி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.
Also Read | பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?
கோடை விடுமுறைக்கு இந்த புதிய கேஷ்பேக் சலுகையை கொண்டு வருவது பலருக்கு பயனளிக்கும் என NPCI தெரிவித்துள்ளது. யாரேனும் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கேஷ்பேக் சலுகை மூலம் பயனடையலாம். கிட்டத்தட்ட ரூ. 15 ஆயிரம் வரை பணத்தை திரும்பப் பெறலாம்.
நம் நாட்டில் இருந்து பலர் தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற பல நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். எனவே, அத்தகையவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. எனவே, இந்த ரூப் ஜேசிபி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துவோர் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card