முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் வரலாற்றில் ஒரு புதிய கொள்கையை உருவாக்கும் வகையில், இந்நிறுவனம் ஊழியர்களின் பெயரில் ஈக்விட்டி பங்குகளை எழுதியுள்ளது.
ஒருபுறம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் செலவு குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தில் 5.11 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிறுவனம் இதை மே 14 அன்று மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்தது. இன்ஃபோசிஸ் எடுத்த இந்த முடிவு பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நிறுவனத்தின் இலக்குகளுக்கு ஏற்ப ஊழியர்களுடன் இணைந்து பணிபுரிவது எல்லா நிறுவனத்திற்கும் ஒரு சவாலாக உள்ளது. ஏனெனில் பல ஊழியர்கள் நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், அவர்களே உரிமையாளர்களாக இருந்தால், அவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்குவார்கள். இதை மனதில் வைத்து இன்ஃபோசிஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவு இன்ஃபோசிஸில் திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், திறமையானவர்களை நிறுவனத்திற்கு ஈர்க்கவும் உதவும். அதே நேரத்தில், பணியாளர் நிர்வாக மனப்பான்மையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தில் உள்ள எந்த அளவிலான பணியாளரும் இந்த உரிமைத் திட்டத்திற்குத் தகுதி பெறலாம்.
5,11,862 ஈக்விட்டி பங்குகள் ஊழியர்களுக்கு எழுதப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் செயல்திறனுக்கான வெகுமதியாக இந்த உரிமை வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பங்குகளில், 1,04,335 பங்குகள் 2015 பங்கு ஊக்க இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டன. 2019 இன்ஃபோசிஸ் விரிவாக்கப்பட்ட பங்கு உரிமைத் திட்டத்தின் கீழ், மீதமுள்ள 4,07,527 பங்குகளை ஊழியர்களுக்கு எழுதியுள்ளது.
இந்த உரிமைத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிறுவனத்தின் உரிமையை விரிவுபடுத்துவதும் பங்குதாரர் மதிப்பை அதிகரிப்பதும் ஆகும். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.65 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் மற்றும் இன்க்ரிமென்ட்டுக்குப் பதிலாக, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்குப் பரிசாக இந்தப் பங்குகள் எழுதப்பட்டுள்ளன.
இன்ஃபோசிஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். அதோடு சந்தை மதிப்பின் அடிப்படையில் ஐடி பிரிவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாக உள்ளது. பிஎஸ்இயில் இன்ஃபோசிஸ் பங்கு விலை ரூ.1,245.55. நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ. 20,74,93,73,460 என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு மொத்தம் 414,98,74,692 ஈக்விட்டி பங்குகள் உள்ளதாகவும், ஒவ்வொரு ஈக்விட்டி பங்கின் மதிப்பு ரூ.5 என்றும் கூறியுள்ளது.
இன்ஃபோசிஸ் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.