முகப்பு /செய்தி /வணிகம் / அம்மாடியோவ்.. ஜிஎஸ்டி வசூலை வாரிக்குவித்த மார்ச் மாதம்! எத்தனை கோடி தெரியுமா?

அம்மாடியோவ்.. ஜிஎஸ்டி வசூலை வாரிக்குவித்த மார்ச் மாதம்! எத்தனை கோடி தெரியுமா?

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

GST collection : மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 15 விழுக்காடு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

வரலாற்றிலேயே இரண்டாவது அதிக ஜிஎஸ்டியாக 1 லட்சத்து 60ஆயிரத்து 122 கோடி ரூபாய் கடந்த மார்ச் மாதம் வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக 29 ஆயிரத்து 546 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டியாக 37ஆயிரத்து314 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 82ஆயிரத்து907 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரலில் வசூலிக்கப்பட்ட 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி என்பதே இதுவரை அதிகபட்ச தொகையாக இருந்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 15 விழுக்காடு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டு முழுவதிலும் சராசரியாக 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறையாமல் மாதந்தோறும் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியசமைச்சகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: GST