முகப்பு /செய்தி /வணிகம் / ரயில் முன்பதிவில் இந்த விஷயம் தெரியுமா? ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலையே ரிசர்வ் செய்யலாம்.. விவரம் இதோ!

ரயில் முன்பதிவில் இந்த விஷயம் தெரியுமா? ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலையே ரிசர்வ் செய்யலாம்.. விவரம் இதோ!

ரயில் டிக்கெட் புக்கிங்..!

ரயில் டிக்கெட் புக்கிங்..!

தனிநபர்கள் யாருக்கும் ஒட்டுமொத்த ரயிலையும் முன்பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது என்றாலும், அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு பெரும் திரளாக கிளம்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்ளூரில் விசேஷம் என்றால் 10, 15 கார்கள் மற்றும் டூ வீலர்களில் நம் உறவுகள் அனைவரும் வந்து சங்கமித்து விடுவார்கள். அதுவே மாவட்டம் விட்டு மாவட்டம் என்றால் வேன், பேருந்து போன்ற பெரிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து புறப்பட்டுவிடுவோம். பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா செல்வது என்றாலும் இதேதான். அதே சமயம், மாநிலம் விட்டு மாநிலம் திருமண உறவுகள் மலர தொடங்கியுள்ள இன்றைய சூழலில் உங்கள் உறவுகளை ஒட்டுமொத்தமாக அழைத்துச் செல்ல என்ன செய்வது? அல்லது உங்கள் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் அல்லது உங்கு குடியிருப்பு பகுதி மக்கள் மொத்தமாக சுற்றுலா கிளம்பிச் சென்றால் என்ன செய்வது?

கண்டிப்பாக ரயிலில் தான் சென்றாக வேண்டும். நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக முன்பதிவு செய்து கொண்டிருக்க முடியாது. இத்தகைய சூழல்களுக்காகவே ஒட்டுமொத்த பெட்டியையும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தருகிறது இந்திய ரயில்வே. ஒரு பெட்டி மட்டுமல்ல, உங்களுக்கு வேண்டுமானால் ஒட்டுமொத்தமாக ஒரு ரயிலையே முன்பதிவு செய்து கொள்ளலாம்.தனிநபர்கள் யாருக்கும் ஒட்டுமொத்த ரயிலையும் முன்பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது என்றாலும், அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு பெரும் திரளாக கிளம்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

Read More : வங்கி லாக்கரில் பணம் வச்சிருக்கீங்களா...? இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

சரி, இதையெல்லாம் எப்படி செய்வது என்ற கேள்வி எழுகிறதா? இந்த சிறப்பு முன்பதிவுகளை செய்ய உங்களுக்கு பிரத்யேக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் வேண்டும். அதனை நீங்கள் https://www.ftr.irctc.co.in/ftr என்ற இணையதளத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதிதாக ஐடி பதிவு செய்து, லாகின் செய்தவுடன் ஒரு பெட்டி அல்லது ரயிலை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.

top videos

    தேதி, கட்டணம் மற்றும் கோச் விவரங்கள் : 

    ஒட்டுமொத்தமாக புக்கிங் செய்யும்போது நீங்கள் என்றைக்கு பயணம் செய்ய உள்ளீர்கள்? எந்த வகையான பெட்டி (கோச்) உங்கள் பயணத்திற்கு தேவைப்படுகிறது என்ற விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
    முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி வசதி, ஏசி சேர் கார் என உங்களுக்கு பிடித்தமானதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
    ஒட்டுமொத்த பெட்டியையும் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக நீங்கள் 30 முதல் 35 சதவீத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல், பாதுகாப்பு டெபாசிட் கட்டணம் ஒன்றையும் நீங்கள் செலுத்த வேண்டும்.
    பயணம் முடிந்தவுடன் இந்த டெபாசிட் தொகையை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 30 முதல் 6 மாதங்களுக்கு முன்பாக இந்த முன்பதிவை நீங்கள் செய்ய முடியும். உங்கள் பயணம் ஒத்திவைக்கப்பட்டால் இந்த முன்பதிவை நீங்கள் ரத்து செய்து கொள்ளலாம்.
    First published:

    Tags: Indian Railways