முகப்பு /செய்தி /வணிகம் / கடந்த நிதியாண்டில் இந்தியன் ரயில்வேயில் வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃபார்ம் ஆகாத பயணிகளின் எண்ணிக்கை தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் RTI தகவல்..

கடந்த நிதியாண்டில் இந்தியன் ரயில்வேயில் வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃபார்ம் ஆகாத பயணிகளின் எண்ணிக்கை தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் RTI தகவல்..

ரயில்

ரயில்

கடந்த 2022- 2023 நிதியாண்டில் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்த போதிலும், வெயிட்டிங் லிஸ்டில் இருந்ததால் 2.70 கோடி பயணிகளின் பயணம் தானாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களின் போக்குவரத்து சேவைகளை எளிதில் மற்றும் குறைந்த செலவில் நிவர்த்தி செய்யக்கூடிய ஒன்று என்றால் அது நிச்சயம் ரயில்வே துறையாகத் தான் இருக்க முடியும். அதற்கேற்ப இந்தியன் ரயில்வே துறையும் மக்களின் வசதிக்காக பல திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கிவருகிறது.

குறிப்பாக வசதியாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு முதல் தரம், இரண்டாவது தரம், ஸ்லீப்பிங் கோச் போன்றவற்றில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதிகளும் உள்ளது. ஆனால் என்ன? சில சமயங்களில் நம்முடைய வசதிக்காக ரயில்வேயில் புக்கிங் செய்தாலும் வெயிட்டிங் லிஸ்டில் அதாவது காத்திருப்பு பட்டியலில் தான் இருக்கும்.

ஆர்ஏசி இருந்தால் கூட (RAC) ரிசர்வ் வேசன் காம்பார்ட்மன்டில் ஏற முடியும். ஆனால் நாம் புக்கிங் செய்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால் நம்மால் பயணம் செய்ய முடியாமல் தானாகவே டிக்கெட் ரத்தாகிவிடும். இப்படி கடந்த 2022- 2023 நிதியாண்டில் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்த போதிலும், வெயிட்டிங் லிஸ்டில் இருந்ததால் 2.70 கோடி பயணிகளின் பயணம் தானாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தாக்கல் செய்த RTI மனுவுக்குப் பதிலளித்த ரயில்வே வாரியம், கடந்த 2022- 20233 நிதியாண்டில் 1.76 கோடி பயணிகள் முன் பதிவு செய்துள்ளனர். அதே சமயம் 2.72 கோடி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய போதிலும், போதிய இருக்கை இல்லாததால் காத்திருப்பு பட்டியலில் இருந்துள்ளதால், அவர்களின் டிக்கெட் உறுதியாகாததால் பயணம் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதோடு ரத்து செய்யப்பட்ட பிறகும், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டாலும், முன்பதிவு கட்டணமாக ரூ. 20 பிடித்தம் செய்யப்படும் எனவும தெரிவித்துள்ளது.

Read More : உஷார்.. ஆன்லைன் மோசடி இப்படியும் நடக்குது.. ரூ.96லட்சத்தை இழந்த நபரின் சோகக் கதை!

ரயில்வே வாரியத்தின் தகவலின் படி, இதே போன்று கடந்த 2021-2022 ஆம் ஆண்டில், மொத்தம் 1.06 கோடி பயணிகள் புக்கிங் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2014-15 ஆம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட பிஎன்ஆர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாகவும், கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 81.05 லட்சமாகவும் இருந்தது. கடந்த 2016-2017-ல் 72.13 லட்சமாகவும், 2017-18-ல் 73 லட்சமாகவும், கடந்த 2018-2019-ல் 68.97 லட்சமாகவும் இருந்தது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2020-21 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் மீதமுள்ளதால் ரத்து செய்யப்பட்ட PNR மொத்த எண்ணிக்கை 38.89 லட்சமாக இருந்தது. மேலும் 61 லட்சம் பயணிகள் இந்த PNR-களில் பதிவு செய்துள்ளதாகவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த இந்திய ரயில்வே துறை அதிகாரிகள், தேவைக்கேற்ப ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் எடுத்து வருவதாகவும், இதன் மூலம் பயணிகள் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு குறையும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு முன்னதாக, ரயில்வே நிர்வாகம் 10,186 ரயில்களை இயக்கியது. ஆனால் தற்போது 10,678 ரயில்களாக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும் தற்போது "நெட்வொர்க் முழுவதும் சிக்னலிங் மற்றும் டிராக் பணிகள் நடந்து வருவதால் விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவடையும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Indian Railways