முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.10 லட்சம் வரை கிடைக்கும் ரயில் இன்சூரன்ஸ்.. எப்படி அப்ளை செய்யலாம்?

ரூ.10 லட்சம் வரை கிடைக்கும் ரயில் இன்சூரன்ஸ்.. எப்படி அப்ளை செய்யலாம்?

ரயில்வே

ரயில்வே

ரயில்வே இன்சூரன்ஸ் என்பது ரயில் பயணிகள் அனைவருக்கும் வழங்கப்படும் சலுகையாகும்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில்வே இன்சூரன்ஸ் ரயில் பயணிகள் அனைவருக்கும் பொருந்தும். இது குறித்த குறைவான விழிப்புணர்வு காரணமாக மிகச் சிலரே இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்துகின்றனர். ரயில்வே இன்சூரன்ஸ் குறித்த சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பயணம் என்றாலே அது சுவாரஸ்யமானது தான். அதிலும் ரயில் பயணம் என்றால் சொல்லவா வேண்டும்? ரயிலில் பயணிக்க நம்மில் பெரும்பாலோனருக்கு மிகவும் பிடிக்கும். பிற போக்குவரத்துகளைக் காட்டிலும் குறைவான கட்டணம், சௌகரியமான பயணம், கழிப்பறை வசதிகள், படுத்துக்கொண்டே பயணிப்பதற்கான வாய்ப்பு என ரயில் பயணத்தின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த ரயில் பயணத்தில் இன்சூரன்ஸ் வசதிகள் கூட உண்டு என்பது பலருக்கு தெரியாது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் ரயில் இன்சூரன்ஸிற்கு தகுதி பெறுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே உள்ளது. ஏன் ரயில் இன்சூரன்ஸ் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.

உலகளவில் இந்திய ரயில்வே மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்காக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். பயணிகளின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படியான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இன்சூரன்ஸ் இருக்கிறது.

ரயில் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு பயணி இறந்துவிட்டாலோ அல்லது அவருக்கு காயம் ஏற்பட்டாலோ அதற்கான செலவுகளை இந்த இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்குகிறது. இதன் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான இன்சூரன்ஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது ரயில் பயணக் காப்பீடு (ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.

1 ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் செலுத்துவதன் மூலமாக ரயில் பயணிகள் ரூ.10 லட்சம் வரையிலான இன்சூரன்ஸ் பெறலாம். ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ் வசதி கிடைக்கிறது. இது ரயிலில் பயணிக்கும் எல்லா பயணிகளுக்கும் உண்டு. எனினும், மிகச் சிலரே இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி கொள்கின்றனர். இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ரயில் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் தெரியாத காரணத்தால் இந்த வசதி பலரால் பயன்படுத்தப்படாமல் போகிறது.

இந்திய ரயில்வே இணையதளத்தில் பயணித்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ் குறித்த ஒரு பாப் அப் நோட்டிஃபிகேஷன்-ஐ நீங்கள் கவனித்திருக்கலாம். அடுத்த முறை நீங்கள் ரிசர்வேஷன் செய்யும் போது மறக்காமல் இந்த இன்சூரன்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இதற்கு அதிக செலவு ஆகாது. நீங்கள் இன்சூரன்ஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்த பின்னர் உங்கள் இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பருக்கு ஒரு லிங்க் கிடைக்கும். இது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லிங்க். அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் நாமினி விவரங்களை உள்ளிடலாம். உங்கள இன்சூரன்ஸ் பாலிசியில் நாமினி இருந்தால் மட்டுமே உங்களது இன்சூரன்ஸ் கிளைம் செல்லுபடி ஆகும்.

ரயில் விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கு ஏற்ப காப்பீட்டில் இருந்து இழப்பீடு கிடைக்கும். ஒருவேளை விபத்தில் பயணிகள் இறந்தால் காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கும் பயணி முழுவதுமாக எழுந்து நடமாட முடியாத சூழ்நிலைக்கு ஆளானாலும் அவருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.

விபத்து காரணமாக கை அல்லது கால்கள் பாதிக்கப்பட்டால் பார்ஷியல் டிசெபிலிட்டி கேஸ்களை பொருத்தவரை ரூ.7.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. விபத்தினால் பயணிக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான மருத்துவமனை செலவாக ரூ.2 லட்சம் வரை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

Also Read : 3 சூப்பரான ரீசார்ஜ் பிளான் இதோ.. வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்தான்!

மேலும், ரயில் பயணத்தால் பயணி இறந்துவிடும் பட்சத்தில் அவரின் சடலத்தை போக்குவரத்து மூலமாக எடுத்துச் செல்வதற்கான செலவாக கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இன்சூர் செய்யப்பட்ட நபர் அல்லது அவரது நாமினி இன்சூரன்ஸ் கிளைமை தாக்கல் செய்யலாம். இன்சூரன்ஸ் கிளைம் செய்ய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். இதில் ஒரு சில ஆவண சரிபார்ப்பு முறை அடங்கும். ரயில் விபத்துக்கு உள்ளான நான்கு மாதங்களுக்குள் இன்சூரன்ஸ் கிளைம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

First published:

Tags: Indian Railways, Insurance, Train, Train Accident